தடம் - 1
தடம் - 2
‘அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்’, ஹாரிஸின் இசையைத் தட்டி எழுப்பியவாறு சிணுங்கியது என் அலைப்பேசி. விழித்துப் பார்த்தேன். அதே சென்னை ரயில் நிலையம். வானம் ஒளி சிந்தத் துவங்கியிருந்தது. பாடலின் ஒவ்வொரு வரியும் அவளின் நினைவுகளை மீட்ட, மீண்டும் அவளது நினைவுகளில் தொலைந்து போகவே விரும்பியது மனம். விருப்பமில்லாமல் அலைப்பேசியில் துடித்துக் கொண்டிருந்த எண்ணைப் பார்த்தேன்.
பானையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
”சொல்லுடா பான்ஸ்... என்ன இந்த நேரத்துல?”
“நீ தூங்கிட்டு இல்லையாடா? ச்சே.. நீ தூங்கிட்டு இருக்குறதா நெனச்சி ஒரு ஃபோன் கால வேஸ்ட் பண்ணிட்டேன்டா மாப்பி...”
“ங்கொய்யால... தூங்கும்போது மட்டும் எழுப்பிருந்தீன்னா உனக்கு சங்குதான்டீ... சரி.. மேட்டர சொல்லு.. எதுக்கு இந்த நேரத்துல கால்??”
“ஒன்னுமில்ல மச்சி... இன்னைக்கு உனக்கு என்ன ப்ரோக்ராம்? எங்கயாவது மீட் பண்ணலாமான்னு கேக்கத்தான் ஃபோன் பண்ணேன்...சரி... இப்ப நீ எங்க இருக்க?”
“நான் எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கேன் மச்சி... ரிலேட்டிவ் ஒருத்தங்கள ரிஸீவ் பண்ண வந்தேன்... அப்புறம், இன்னைக்கு ஒரு மேரேஜ் இருக்கு மச்சி... நெக்ஸ்ட் வீக்கெண்ட் மீட் பண்ணலாமா?”
“ஓ!! ஓகே ஓகே... கேரி ஆன்... அப்போ, அப்புறமா ஃபோன் பண்றேன்”
எல்லா நட்பு வட்டங்களிலும் அதிகமான கிண்டல்களுக்கும் எள்ளல்களுக்கும் ஆளாகும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இருக்கும். அப்படி எங்கள் பள்ளிக் கால நட்பு வட்டத்தின் வடிவேலுதான் ’பானை’ என்ற அர்ஜுன். பானைக்கான உண்மையான பெயர்க்காரணம் இதுவரையில் எங்களுக்கும் தெரியாது. பள்ளிக்குப் பிறகு அவனுடனான தொடர்பு, காலவோட்டத்தினால் சிறிது சிறிதாகத் துண்டிக்கப்பட்டு, சில மாதங்களிலேயே முழுவதுமாக அறுந்து போனது. சென்ற முறை நெல்லைச் செல்ல இதே எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போதுதான் அவனை மீண்டும் சந்தித்தேன்.
"டேய் பான மாப்ள... எப்படிடா இருக்க?? பாத்து எத்தன வருசம் ஆச்சு??", என் முதுகில் லேசாக தட்டிய அவனை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவினேன்.
"நல்லா இருக்கேன் மச்சான். பரவாயில்லடா மச்சி... 'உன்னைய எங்கேயோ பாத்த மாதிரி இருக்குது'னு நெத்திய சுழிச்சிக்கிட்டே சினிமா டையலாக் அடிப்பேன்னு நெனச்சேன்"
"அட... உன்னையெல்லாம் மறக்க முடியுமா மச்சான்? அகில உலகத்துலையே வடிவேலுக்கு அப்புறம் பென்சிலால மீச வச்ச ஒரே ஆளு நீதானே மச்சி... அதெல்லாம் மறக்க முடியுமா?"
"போங்கடா... போங்க... போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கடா..."
"ஆமாம்.... உங்க தல ப்ரசாந்த்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு திரிஞ்சியே... என்னடா ஆச்சு அதெல்லாம்?"
"தம்பி... அவர்தான் ரெண்டாயிரத்து பதினாறுல தமிழ்நாட்டு ஸீ.எம். அப்ப தெரியும்டா உங்களுக்கெல்லாம்... சரி.. கம்பார்ட்மெண்டுல எதாவது ஃபிகர் இருக்குதானுதானே பாத்துட்டு இருக்க?"
"எப்படி மச்சான் கண்டுபுடிச்ச?"
"ஏன்டா... இத கண்டுபுடிக்க பல்ராம் நாயுடுவையா கூட்டிட்டு வரனும்? மொச புடிக்கிற நாய மொகர கட்டையப் பாத்தா தெரியாதா? ஏன்டா ஸைட் அடிச்சு கெட்டுக் குட்டிச் சுவரா போறீங்க?? உங்க கூடெல்லாம் சேரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க"
"அடங்குடா அயோக்கிய ராஸ்கல்... அண்டர் ஏஜ்லையே அறிவியல் வாத்தியார் ஆரோக்கியசாமி பொண்ணு சரோஜாவுக்கு லட்டர் கொடுத்து மாட்டி, பனியனோட ஸ்கூல் வாசல்ல ஒக்காந்திருந்த நாயெல்லாம் பேசுது... ஆமாம் மச்சி... நம்ம க்ளாஸ் ஹேமா மாலினிக்கு ரூட் விட்டியே.. என்னடா ஆச்சு?"
“அட நீ வேற மாம்ஸ்... அது ஒரு சப்ப ஃபிகர்டா...”
“சப்ப ஃபிகரா? ஏன்? பருப்பு வேகலையா?”
“ஃப்ரீயா விடு மச்சி... ஜான் ஆப்ரஹாமா இருந்தா, ஆயிரம் பிபாசா பாசுக்கள் லைஃப்ல க்ராஸ் பண்ணத்தான் செய்வாங்க.. அதுக்கெல்லாம் நாம கலவரப்பட முடியுமா?”
“சரி மாப்ஸ்... இப்ப எங்க.. என்ன பண்ணிட்டு இருக்க?”
"இந்த செம்பரம்பாக்கத்துல ஒரு இஞ்சினியர் காலேஜ் இருக்குல்ல?”
“ஆமாம்.. அங்கதான் உங்க ஓனிக்ஸ் கம்பெனி குப்பைய அள்ளுதா?”
“லே தம்பி... அடுத்த நாராயணசாமியப் பத்தி தப்பா பேசிட்டு இருக்க... நாங்களும் இப்ப கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆயிட்டோம் தெரியும்ல... ”
“டே வெண்ண மாக்கான்... அது நாராயணசாமி இல்ல... நாராயண மூர்த்தி”
‘காலையில் தினமும் கண்விழித்தாலே கண் தேடும் தேவதை அம்மா’, மறுபடியும் என் அலைப்பேசி அலறியது. இம்முறை அம்மாவிடமிருந்து அழைப்பு.
“சொல்லும்மா...”
“டேய்... புஷ்பா ஃபோன் பண்ணா... அவ தாம்பரத்துலையே எறங்கிட்டாளாம். அவ ஃப்ரெண்டு வீட்டுக்குப் போயிட்டு சாயுங்காலமா வர்றாளாம். நீ கெளம்பி வா”
அழகான கவிதையொன்றை வாசித்து சிலாகிக்கும் தருணத்தில், கவிதை புத்தகத்தைக் கைப்பற்றி சிரிக்கும் நண்பனிடம் தோன்றும் அந்த ஒரு நொடி எல்லையற்றக் கோபத்தை போன்றதொரு சினத்தைத் திணித்துச் சென்றது அம்மாவிடமிருந்து வந்த அவளைப் பற்றியத் தகவல். அவள் மீதல்ல. அவளை தாம்பரத்திலேயே இறங்கச் செய்த அவள் தோழியின் மீது. திட்டமிட்டப்படியே செய்து முடித்துவிட்ட ஆணவத்தில் திரியும் விதியின் மீது. சற்று நேரத்திற்கு முன்பு அழகான மாயையைத் தூவி தன்னிலை சிதைந்த பொழுதின் மீது. இப்படி அனைத்தின் மீதும். எதிர்பார்ப்புகளின் உச்சத்தில் திழைத்திருந்த நான் ஏமாற்றங்களின் விளிம்பில் நின்ற இப்பொழுதில் கேலியாய் நகைக்கின்றன காத்திருந்த நொடிகளனைத்தும்.
நடைமேடைகள் கடந்து, சென்னையின் துரித வாழ்க்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ரயிலில் ஏறினேன். தாம்பரம் நோக்கி நகரத் துவங்கியது ரயில். தாம்பரத்திற்கேச் சென்று அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று அடிமனதிலிருந்து எழுந்த எண்ணத்தை மெதுவாய் அமுக்கி, வீடு இருக்கும் சூளைமேட்டுக்குச் செல்லவே தீர்மானித்தேன்.
மலரும் நினைவுகளைத் திசைத் திருப்புவது, இடைப்படும் நிகழ்வுகளின் அசாத்திய திறமை. அப்படி விளம்பர இடைவேளையாய் நுழைந்துவிட்டதுதான் பானையைப் பற்றியச் சிந்தனைகளும். நிற்கும் பயணிகளின் தாங்கலுக்கான இரும்புக் கம்பியினை பிடித்தவாறே, அறிவியல் விதியினை கண்முன்னே நிகழ்த்திப் பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நிஜங்களில் துளிர்க்கத் துவங்கின அவளது நினைவுகள் மறுபடியும்.
ஹை கிரவுண்ட் என்று நெல்லை மக்களால் அறியப்படும் பாளை மேட்டுத்திடலிலுள்ள வி.எம்.எஸ் திருமண மண்டபத்தில்தான் ஹஸியின் திருமணம் நடைப்பெற்றது. நெல்லை மருத்துவமனையும், அதன் அருகிலேயே இளசுகளின் இதயத் துடிப்புகளை ஸ்டெதஸ்கோப்பாய் தோளில் போட்டுக் கொண்டு நடக்கும் மருத்துவக் கல்லூரிச் சிட்டுகளும், கடப்பவர் விழிகளில் ஓர் விரிவை ஏற்படுத்தும் அரசனின் வீடும் பாளை மேட்டுத் திடலின் சிறப்பம்சங்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக மண்டப மாடியில் அமைந்துவிட்டபடியால் அஞ்சலியை திருமணம் முடியும்வரை காண முடியவில்லை. பெண்வீட்டுக்காரன் என்பதால் உணவுப் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். பாவாடை தாவணி தோரணையல்லாமல், அளவான ஒப்பனையோடு மிகச் சாதாரணமாய் பச்சை நிற சுடிதாரில் வந்திருந்தாள். அவளிடம் எதுவுமே பேசாமல், அவளுக்கான கேரட் அல்வாவை அவளது இலையில் வைத்துவிட்டு மெல்ல நகர்ந்தேன்.
"ஹலோ... என்ன வெறும் கரண்டிய மட்டும் காட்டுறீங்க? எங்களுக்கெல்லாம் அல்வா கொடுக்க மாட்டீங்களா?" என்று சிறிய புன்னகையை ஏந்தியவாறே கிண்டல் தொனியில் கூறினாள்.
'அட்டு ஃபிகர்களுக்கெல்லாம் அல்வா கொடுக்கக் கூடாதுன்னு எங்க தலைவர் சத்யராஜ் அன்னைக்கே சொல்லிருக்காரு' என்று சொல்ல நினைத்து,
"வாயாடிகளுக்கெல்லாம் அல்வா கொடுக்குறதில்ல. அதுவுமில்லாம திருநெல்வேலிக்கே அல்வாவான்னு சம்பந்தமே இல்லாம ஸீனப் போடுவீங்க... அதான்" என்றேன்.
"இங்க என்னடே பொம்பள புள்ளைங்களோட சலம்பிட்டு நிக்க. அங்க பிரியாணியே வச்சாச்சு. இன்னும் ஸ்வீட்ட காணோம்னு சத்தம் போட்டுட்டு இருக்காவ. போய் அங்க போய் சப்ளை பண்ணுப்பா" என்று வயித்தெறிச்சல் பிடித்த பெருசொன்று, தன் நாட்டாமை வேலையை செவ்வனச் செய்ய, அவள் சப்தமிட்டு சிரித்து விட்டாள். அவள் சிரித்தது மட்டுமல்லாது, பக்கத்திலிருந்த டொப்பி மூக்கிகளும் சிரிப்பான்களை சிதறவிட, அதுமுதல் பெண்களிருக்கும் இடத்திற்கே செல்லவில்லை.
மணப்பெண் தோழியாதலால் என் அக்கா, ஹஸியோடு சுற்றித் திரிய, என் அம்மாவும் பெண்களின் வழமையான அரசி முதல் அடுத்தத் தெரு மீனா வரையிலான ஆராய்ச்சி உரையாடலில் பட்டுச் சேலைக் கும்பலோடு தஞ்சமடைய, தனிமையின் துணையுடன் களைந்து கிடந்த நாற்காலிகளின் மத்தியில் அமர்ந்து என் கைப்பேசியில் எதையதையோ பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஹாய் மச்சான்...”, சிதறிக் கிடந்த நாற்காலிகளில் ஒன்றை எடுத்து ஒன்றுக்கு குறைந்த அடி தூரத்தில் போட்டு, என் எதிரிலமர்ந்தாள் அஞ்சலி.
“வாங்க மேடம். மூனு ரவுண்டு மூக்கு பிடிக்க சாப்பாடா?? உன்னால கடைசி பந்தில பிரியாணி தட்டுப்பாடாமே?”
“என்ன இவ்வளவு கொறைவா சொல்லிட்டீங்க? நாங்கெல்லாம் அஞ்சு ரவுண்டுக்கு கம்மியா சாப்ட்டதே இல்ல... சரி... டைனிங் ஹாலுல தலைவருக்கு செமையா மூக்குல அடி விழுந்ததே... அதான் எப்படி இருக்குதுன்னு பாக்கலாம்னு வந்தேன்”
”அவன் மட்டும் என் கைல...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
“என்னலா கூப்ட்டீயாமே?”, என்று அஞ்சலியைப் பார்த்துக் கேட்டவாறு சமையல் செய்யும் அலிமா மாமி அங்கு வந்து நின்றார்கள்.
“ஆமாம் மாமி.... மச்சான் ஏதோ உங்கக் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதான் கூப்ட்டேன்...” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ”என்ன மச்சான்? நேத்து எங்கிட்டச் சொன்னீங்களே?? அத நீங்களே உங்க வாயால சொல்லிட்டீங்கன்னா, இதே மண்டபத்த இப்பவே புக் பண்ணிடலாம்..” என்றாள்
”ஆமாம் மாமி... இந்தப் பொண்ணு என்னையத்தான் கட்டிப்பேன்னு ஒத்த காலுல நிக்கிறா. நீங்களே சொல்லுங்க... கிளி வேசத்துல திரியற காக்காவயெல்லாம் கட்டிக்க முடியுமா?”
இதை எதற்காக அவர்களிடம் சொல்கிறேனென்று புரியாமல் குழம்பிப் போய் நின்னார்கள் மாமியும்.
“ஒன்னுமில்ல மாமி... சென்னைல எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்களுக்கு கல்யாணம் இருக்குது. நீங்க சமைக்க வருவீங்களா? இல்லையானு விசாரிக்கத்தான் கூப்ட சொன்னேன்”, என்று மாமியை சமாளித்து அனுப்பி வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது.
”அடப்பாவி!! இப்படி கேப்ல கெடா வெட்டுறீங்க... சரி மச்சான்... நான் வீட்டுக்கு கெளம்புறேன். உங்கள வீட்ல ட்ராப் பண்ணனுமா?”
‘கரும்புத் தின்னக் கூலியா?’ என்பதால் உடனே ஒத்துக் கொண்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.
“அப்புறம் அஞ்சலி.. என்ன பண்ணிட்டு இருக்க? உன் கூடத்தான் நடந்துட்டு இருக்கேன்னு மொக்க காமெடிலாம் தயவு செஞ்சு அடிச்சிடாத...”
“நான் சதக் காலேஜ்ல பி.ஏ. ஹிஸ்ட்ரி படிச்சிட்டு இருக்கேன்...”, சிரித்துக் கொண்டே கூறினாள்.
“ஓ!! நீ எல்.கே.ஜியே ரெண்டு வருசமா படிச்ச படிப்பாளில்ல... நான் கூட கை முட்டி வரைக்கும் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு, பெரிய கண்ணாடி ஒன்னப் போட்டுக்கிட்டு, சிம்ரன் மாதிரி கலெக்டர் ஆகி, காதல் பாட்டு ஒன்னப் பாடி விஜய்யோட ஜோடி சேரத்தான் ஹிஸ்ட்ரி எடுத்தியோன்னு ஒரு நிமிசத்துல தப்புக் கணக்குப் போட்டுட்டேன்”
“உங்கள மாதிரி ப்ரைவேட் காலேஜ்ல சேந்து அப்பா காச கரியாக்குறதவிட நாங்கெல்லாம் எவ்வளவோ மேல்”
“ஹேய்... ஐ எம் ஸ்டடியிங் இன் ஒன் ஆஃப் த டாப் டென் காலேஜ் யூ நோ...”
“ஒரு அழகானப் பொண்ணு கூட வந்தா உடனே இந்த பீட்டர ஆரம்பிச்சிடுவீங்களே?”
“அழகானப் பொண்ணா? எங்க? எங்க?”, என்று என் கைகளை விழிகளுக்குமேல் நெற்றியில் வைத்து அங்குமிங்கும் பார்த்தேன்.
“எங்க ஊர்ல அரவிந்த்னு ஒரு ஐ ஆஸ்பிட்டல் இருக்கு. ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அங்க ஒரு தடவ கண்ண செக் பண்ணிக்கோங்க”
“இன்னும் எத்தன நாளைக்கு இதே காமெடிய அடிச்சிட்டு இருப்பீங்க? கொஞ்சம் புதுசா கண்டுபுடிங்க... ஆனாலும், உங்க அப்பாவ சும்மா சொல்லக் கூடாது. அவருக்கு அப்பவே சென்ஸ் ஆஃப் ஹியூமர் ஜாஸ்தி”
“எங்க அப்பா’ல்ல... அதான்” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள்.
“ஆமாம்... கருவண்டு மாதிரி இருக்குற உனக்கெல்லாம் மின்மினி புஷ்பாஞ்சலின்னு பேரு வச்சிருக்காரு பாரு... நல்ல நகைச்சுவை உணர்வு உங்க அப்பாக்கு...”
”ஹேய்...”, என்று என் வலது கையில் லேசாக அறைந்தாள். அடியென்றாலும் அவளின் முதல் ஸ்பரிசம். என் நினைவுப் பெட்டகத்தினுள் அத்துமீறி நுழைந்து விட்டிருந்தது. அதற்குள் அவளது ஸ்கூட்டியின் அருகே வந்திருந்தோம். அவள் வண்டியின் பின்னுருக்கையில் நான் அமர, அவளது வண்டி எங்களிருவரையும் சுமந்துக் கொண்டு வேகமாக கிளம்பியது. பேரழகின் செறிவுநிலையொத்த ஓர் தேவதையுடன் பறக்கும் குதிரைகள் பூட்டிய ரதமொன்றில் வானவீதியிலே உலா போவதுபோல் ஒப்பிட்டுக் கொண்டேன், அவளுடனான என் அப்போதைய நிகழ்வியலை. அவள் இடைதனை என் இரு கைகளால் வளைத்துப் பற்றி, அவளது பின் தோளில் என் முகம் சாய்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒப்பமையில்லாமல் வண்டியின் பின்புற கம்பியைப் பிடித்துக் கொண்டு பயணித்தேன். காற்றின் சதியால் அவள் மெய்யிலிருந்து பிரிந்த மெலிதான துப்பட்டா நுனி, அவளோடு மறுபடியும் சேர எத்தனித்த அனைத்து முயற்சிகளிலும் என் முகம் உரசி, என்னை வேற்று கிரகத்திற்கு கடத்திச் சென்றுக் கொண்டிருந்தது.
சுட்டியாக மட்டுமே கண்டிருந்த மின்மினியை முதன்முறை கண்ணீரோடு கண்ட பொழுதில் உடைந்துபோனது என் இதயம் மட்டுமல்ல, என் மொத்தமும்தான்.
-- தடங்கள் தொடரும்...
-தடம் - 4
Tuesday, October 14, 2008
இருள் தடங்கள்... - 3
பதினெட்டுப் பட்டிக்கும் சொன்னது - ஜியா ... பஞ்சாயத்து பண்ண நேரம்... 11:00 PM
வழக்கு... இருள் தடங்கள், காதல், தொடர்கதை
Subscribe to:
Post Comments (Atom)

23 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...
Me the first????
ஹை நான் தான்... :)) போய் போஸ்ட் படிச்சிட்டு வரேன்..!! :)))
அச்சச்சோ அண்ணா சூப்பரா இருக்கு..!! :)))))))))சோ நோ கும்மி டுடே பை..!! ;)))))
//அவள் இடைதனை என் இரு கைகளால் வளைத்துப் பற்றி, அவளது பின் தோளில் என் முகம் சாய்க்க வேண்டுமென்று தோன்றியது. //
அடடா! நல்லா இருக்கே :)
//உடைந்துபோனது என் இதயம் மட்டுமல்ல, என் மொத்தமும்தான்.//
அச்சச்சோ. அப்புறம்??
அடுத்து??
// பானையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது//
பானையா? ஹீ ஹீ J இது என்ன பேர்?
// ஜான் ஆப்ரஹாமா இருந்தா, ஆயிரம் பிபாசா பாசுக்கள் லைஃப்ல க்ராஸ் பண்ணத்தான் செய்வாங்க.. அதுக்கெல்லாம் நாம கலவரப்பட முடியுமா?”//
ஹா ஹா ஹா :))
தப்பு பண்ணிட்டேன்…தெரியாம ஆஃபிஸ்ல படிக்க ஆரம்பிச்சுட்டேன்…சத்தமா சிரிக்க கூட முடியல :((
// மின்மினி புஷ்பாஞ்சலின்னு//
அட மூணும் ஒரே பொன்னா? நான் வேற வேறன்னு இல்ல நினைச்சேன் :))
செம சூப்பரா போகுது கதை…கடசில ஒரு சஸ்பென்ஸோட வேற முடிச்சிருக்கீங்க :)
இன்னொரு தடவ படிச்சேன் ஜி...மறுபடியும் சிரிச்சேன்...ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த பகுதி, ஆனா மத்த பகுதி மாதிரி இதுல கவிதையா இல்லையே கதை :(
//Divyapriya said...
இன்னொரு தடவ படிச்சேன் ஜி...மறுபடியும் சிரிச்சேன்...ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த பகுதி, ஆனா மத்த பகுதி மாதிரி இதுல கவிதையா இல்லையே கதை :(//
இது கதை அதான் கவிதையா இல்ல..!! ;))
ஆஹா சூப்பரா இருக்கு ஜி
:))
இந்த பகுதியும் ஜூப்பரப்பு ஜி..
ரொம்ப இயல்பா எழுதறீங்க.
//சுட்டியாக மட்டுமே கண்டிருந்த மின்மினியை முதன்முறை கண்ணீரோடு கண்ட பொழுதில் உடைந்துபோனது என் இதயம் மட்டுமல்ல, என் மொத்தமும்தான்..//
நல்லாதானே போய்க்கிட்டு இருந்துது.. ஏன் இப்படி ஒரு ட்விஸ்டு...??
அருமை:-)
U r tagged..!! :)) See ma blog..!! :))
//அண்டர் ஏஜ்லையே அறிவியல் வாத்தியார் ஆரோக்கியசாமி பொண்ணு சரோஜாவுக்கு லட்டர் கொடுத்து மாட்டி//
ஐ என்னை மாதிரியே இருக்குதே இந்த கதாபாத்திரம்
அடுத்த பகுதி எப்போ ஜி...??
Enna Ji, next part eppo? remba time edukurenga pola??
கொஞ்சம் லேட்டாத்தான் வந்தேன் சாரி! :(
ஆனாலும்
செம சூப்பரா இருக்கு! ஒருவேளை இப்படியெல்லாம் நமக்கு நடந்தா எப்பிடி இருக்கும்ன்னு சைடுல டிராக் ஓட்டினதால கூட இருக்கலாமோ ? :)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// ஜான் ஆப்ரஹாமா இருந்தா, ஆயிரம் பிபாசா பாசுக்கள் லைஃப்ல க்ராஸ் பண்ணத்தான் செய்வாங்க.. அதுக்கெல்லாம் நாம கலவரப்பட முடியுமா?”//
ஜூப்பரூ
// அவள் இடைதனை என் இரு கைகளால் வளைத்துப் பற்றி, அவளது பின் தோளில் என் முகம் சாய்க்க வேண்டுமென்று தோன்றியது.///
ஓவரா பீல் பண்றாரே என்னவா இருக்கும்?
காமெடிக்கு பின்னால கலவரப் படுத்துறீங்க!
இப்ப தெரியுதா நாங்கள்லாம் ஏன் இப்ப படிக்கிறோம்னு?
:)
hello sir,
naan andha comment unga blog-la potadhan kaaranam, neenga unmaiyai therindhu kolla vendum enbadharkaaga mattum thaan. ungalai vandhu indha problem solve seidhu vaiyunganu naan yaarayum koopidavillai.
unmai therindhu andha divyavin poiyaana ezuthugaluku encourge seiya vendam enbadhai thaan naan sonen. plz dun mistake me sir. and nvr mind about deleting my comment.
neenga post seiyaamal irundhaalum unmai therindhu kondeergal thaane? ofcourse thatz much more than enough for us sir. thanx for ur attention.
take care
அப்படியே கிவ்கட்டி வாங்க...