டிஸ்கி: இந்தப் பதிவு ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருந்ததுனா, அதுக்கு பதிவர் தம்பிதான் பொறுப்பு. இந்தப் பதிவ எழுத கூப்பிட்ட கோபி அண்ணனுக்கு ஒரு யேச்சு.
அழகு. இந்தச் சொல்லே எவ்வளவு அழகா இருக்குது பாத்தீங்களா?? இந்த உலகத்துல எல்லாமே அழகுதான். கண்ணாடியில முகம் பார்க்கும்போது, "இறைவா! என்னுடைய புறத் தோற்றத்தை அழகு படுத்தியதுபோல் என் அகத் தோற்றத்தையும் அழகுபடுத்துவாயாக" என்று வேண்டிக்கங்கன்னு சொல்லுவாங்க. சிலருக்கு கண்மணி கோணலா இருக்கும். சிலருக்கு பல் கொஞ்சம் நீண்டு இருக்கும். இதெல்லாத்தையும் பாக்கும்போது என்னடா இறைவன் நம்மள இவ்வளவு அசிங்கமா படைச்சிட்டானேன்னு நினைக்கத் தோணும். கண்ணே இல்லாதவன், பொக்கை வாய் இதெல்லாம் நெனச்சுப் பாத்தா, நம்மதான் உலகத்துல அழகன்/அழகியே.
அழகென்றவுடனேயே ஞாபகத்துக்கு வர்ற ஆறு அழகுகள்
அம்மா - அம்மா திட்டும்போது கூட ரொம்ப அழகா இருப்பாங்க
மழலை - ஒரு குழந்தை எது செஞ்சாலும் அது அழகாத்தான் இருக்கும். விளையாடும்போது, சிரிக்கும்போது, பேசும்போது, அழுகும்போது, இப்படி எல்லா நேரத்துலையும் அழகா இருக்குறது குழந்தைதான்.
சொந்த ஊர் - இது பெரும்பாலும் கிராமத்துல இருந்து வர்றவங்களுக்கு சொந்த ஊருதான் மற்றைய எல்லா ஊர விட அழகா இருக்கும்.
பெண்கள் - அழகு என்ற வார்த்தையைக் கேட்டவுடனே டக்குன்னு ஞாபகத்துக்கு வர்றது பெண்கள்தான். அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க.
இயற்கை - இயற்கையை ரசிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்கன்னு நெனக்கிறேன்.
கண்ணாடி - எப்ப நாம முகம் பாத்தாலும் ரொம்ப அழகா காட்டும் கண்ணாடியும் அழகுதானே.
அப்பாடா... படம் முடிஞ்சுப் போச்சுன்னு எழுந்திருக்காதீங்க.. இப்பப் பாத்தது ட்ரைலர்.. இனிதான் படமே ஸ்டார்ட் ஆகப் போகுது. மேலப் பாத்த அழகெல்லாம் உடனே ஞாபகத்துக்கு வந்தது. இதெல்லாத்தையும்தான் மக்கள் அடிச்சு, துவைச்சு காயப் போட்டுட்டாங்களே. நாம இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்னு நெனச்சதுல விளைந்ததுதான் இனிமேல்...
அழகான நினைவு
கல்லூரியில் படிக்கும்போது தேசிய நலப்பணித் திட்டத்தில் இருந்தேன். ஒவ்வொரு வருசமும் பத்து நாள் முகாம் போகணும். 'சேவாலயா'ங்ற அனாதை ஆசிரமத்துக்குத்தான் போவோம். காலைல அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு, இரவு பதினொன்று, பனிரெண்டு மணி வரைக்கும் தினமும் வேலை இருக்கும். கல்லூரியில சொகுசா வாழ்ந்துட்டு, அந்தப் பத்து நாளும் வெயில்ல காய்ஞ்சு கள வேலைப் பாக்கணும். தோட்டம் அமைக்கிறது, முட்செடிகள வெட்டுறது, ஆடுகளம் அமைக்கிறதுன்னு பயங்கரமா வேலை இருக்கும். அங்க இருக்குற குழந்தைகளைப் போலவே வாழணும்னு காலைல உப்புமா, பொங்கல்தான் சாப்பாடு. எல்லாரும் அங்க கிடைக்கிற தண்ணியத்தான் குடிக்கணும். அங்குள்ளப் பசங்க குளிச்சதுக்கப்புறம்தான் நாம குளிக்க முடியும். வெளில இருந்து எந்தச் சாப்பாடுப் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது. இப்படி பலக் கட்டுபாடுகளை நாங்களே வச்சி வாழ்வோம். ஒரே தட்டுல சாப்டுவோம். அங்க இருக்குற பசங்களோட சில நாட்கள் சாப்டுவோம். அப்ப, நாம தட்டு எடுக்கவே தேவையில்லை. எல்லாப் பசங்களும் நமக்கு ஊட்டி விட்டே நம்ம வயிற நிறப்பிடுவாங்க. யாருக்காவது வயிறு சரியில்லைன்னா, "அந்த அண்ணாக்கு நீ ஊட்டவே இல்லையாம்" அப்டீன்னு அவன மாட்டி விட்டுவோம். கடைசி நாலு நாள் எங்க இடம் கிடைச்சாலும் அடிச்சப் போட்ட மாதிரி தூங்குவாங்க பசங்க. கடைசி நாள் அந்த இடத்தவிட்டு வர்றதுக்கு மனசே இருக்காது.
அழகான பருவம்
அரும்பு மீசை. முகத்துல பரு. இஸ்திரிப் போட்ட சட்டை பேண்ட். எப்பவும் கலையாத முடி. பத்தாம் வகுப்பு படித்த பருவம்தான். அதுவரை ஆண்கள் பள்ளியிலேயே படிச்ச நான், அப்பத்தான் தனி வகுப்புல பெண்களோடு படிக்கப் போனேன். அதுவும், அவுங்களுக்கு வகுப்பு முடிஞ்சதுக்கப்புறம்தான் எங்களுக்கு ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாலேயே வாசல்ல வந்து காத்துக் கிடப்போம். சட்டைப் பையில் வைத்திருக்கும் பேனாகூட ரொம்ப அழகானதா வாங்குவோம். பெங்களூரில் இருக்கும் அப்பாக்கு விஜய் படத்த அனுப்பி வச்சு, "விஜய் போட்டிருக்குற சட்டை மாதிரியே வாங்கித் அனுப்புங்கப்பா"னு சொல்லுவேன். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ பாத் ரூமுக்குப் போய் தலையையும், சட்டை இண்ஸர்டையும் சரிப் பார்ப்போம். மனசுல எப்பவுமே ஒரு சந்தோஷப் பட்டாம்பூச்சி பறந்துக்கிட்டே இருக்கும்.
அழகான நண்பர்கள்
எனக்கு அமைந்த எல்லா நண்பர்களும் மத்தவங்களுக்கு கிடைத்த நண்பர்களை விட ஒருப் படி அருமையானவங்கன்னு சொல்லுவேன். நாம கேக்காமலேயே, தேவைப்படும் நேரத்துல உதவி செய்வாங்க. அறிவுரைல இருந்து, பணம் வரைக்கும் எல்லாமே தேவைப்படும்போது கிடைக்கும் ஒரே இடம். அவர்கள் அளவுக்கு நான் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேனா என்பது சந்தேகம்தான். விக்ரமன் படத்தப் பாத்துட்டு அதோட கதாநாயகன் மாதிரி யாருமே இருக்க வாய்ப்பில்லைன்னு நெனச்சுட்டு இருந்தேன். அதே மாதிரி தியாகச் செம்மலா ஒரு நண்பன் இருக்கான். நாமெல்லாம் எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு எடுக்குற முயற்சில கண்டிப்பா சில ஆட்களுக்கு கெட்டவனாயிடுவோம். ஆனா எல்லார் கூடவும் நல்லவனா இருந்தது அவன் ஒருத்தந்தான். அகத் தோற்றத்துலையும் சரி, புறத் தோற்றத்திலையும் சரி, அவன் அழகை மிஞ்ச ஆளே கிடையாது.
அழகான குறும்புகள்
சின்ன வயசுல செய்த எல்லா குறும்புகளும் அழகுதான். பதிவெழுத தலைப்பே கிடைக்காத சமயத்துல நாம ரவுண்டு கட்டி அடிக்கிற கேப்டனும் டி.ஆரும் தான் அப்பெல்லாம் நம்ம தலைங்க. கேப்டன் படத்த ஒரு பாக்கெட் டைரில ஒட்டி வச்சி, ரஜினி ரசிகர்கள்கிட்டெல்லாம் எங்க ஆளு மாதிரி ரஜினியால சண்டை போட முடியுமானு கேள்விகள தொடுத்துக்கிட்டு இருந்தது. டி.ஆர் படத்த பாத்துட்டு, 'நாந்தான்டா டி.ஆர். நீங்கெல்லாம் ரவுடிங்க. நான் டக்கு மோட்டர்ல வர்றேன். நீங்கெல்லாம் வழி மறிங்க'ன்னு சொல்லி சண்டைப் போட்டது. பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு பஸ்ஸுக்கு அம்மா கொடுக்குற காச ஐஸ் வாங்கி தின்னுட்டு, லாரி ஏறி போனது. நொச்சி மேட்டுல புகைவண்டி விட்டது. ஆற்றில் மீன் பிடிச்சுட்டு வந்து அம்மாக்கிட்ட அடி வாங்குனது. இப்படி அந்த வயசு குறும்புகள் எல்லாமே அழகுதான்.
அழகான மொழி
தாய்மொழி தமிழ். தமிழ் என்ற உடன் தமிழ் இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைனு நெனச்சிடாதீங்க. தமிழ் பேசும் மக்கள். பெங்களூரில் முதன்முறையாக நிறைய நாட்கள் இருந்துவிட்டு, சென்னைக்கு ஒருமுறை போகும்போது எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னோட நண்பன்கிட்ட கேட்டேன், "என்னடா எல்லாரும் தமிழ் பேசுறாங்க"ன்னு. அமெரிக்காவுக்கு போனதுக்கப்புறமும் அங்க எங்கயாவது தமிழ் பேசுற மக்கள பாத்தாபோதும் நம்ம மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் வரும். அதுவும் புது இங்கிலாந்துத் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழாவுக்கு போனபோது, பட்டுச் சேலை, சுடிதார்னு எங்கப் பாத்தாலும் தமிழ் பேசுற படையப் பாத்ததுக்கப்புறம் ரொம்ப அழகா இருந்தது. தமிழ்ல எழுதுற மக்களப் பாத்ததுக்கப்புறம்தான் நான் பதிவையே எழுத ஆரம்பிச்சேன். தமிழ் மாதிரியே, அழகான மொழி மலையாளம். மலையாளம் எனக்குத் தெரியாது. ஆனால், அதனை மக்கள் பேசும்போது, பாடுற மாதிரியே இருக்கும். அதனாலையே அந்த மொழியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டம் அழகு. விருப்பமில்லாதவர்கள் அப்படியே கடைசிப் பத்திக்குச் செல்லவும்
அழகான நெகிழ்வு
சின்ன வயசுல ஒரு தடவ நான் முதல் மதிப்பெண் வாங்கினா, அல்வா வாங்கி தர்றேன்னு எங்க அப்பா சொன்னாங்க. நான்காம் வகுப்பு படிக்கும்போது எட்டுப்பேர் கொண்ட வகுப்புல முதல் மதிப்பெண் வாங்கி அப்பாக்கிட்டப் போய்ச் சொன்னேன். அவரும் அல்வா வாங்கி என்னோட தம்பி, தங்கைக்கெல்லாம் கொடுத்து எனக்கும் கொடுத்தார். என்னோட தம்பி, தங்கைக்கு கொடுத்ததால எனக்கு அப்போ சரியான கோபம். அதுக்கப்புறம் பாளையங்கோட்டையில் எழுபது பேர் வகுப்புல சேத்தாங்க. முப்பதுக்கப்புறம்தான் ரேங்க். எவ்வளவு முயற்சி பண்ணினாலும் எப்பவுமே ஜஸ்ட் பாஸ்தான். அப்புறம் பாளைக்கே குடி வந்துட்டோம். நாங்க இருந்த தெருவில் எங்க வீட்டைப் பற்றி ரெண்டு வீடு தள்ளிக் கேட்டீங்கன்னா யாருக்குமே தெரியாது. எங்க வீட்ல இருந்து யாருமே அவ்வளவு எளிதா மத்தவங்கக்கிட்ட பழக மாட்டாங்க. ஒரு நாள் வந்த எல்லா தினப் பத்திரிக்கைகளிலும் ஒரு செய்தி. 'பாளை மாணவன் சாதனை'. அதிலிருந்து எங்க அம்மா அந்த தெரு வழியா நடந்து போனாங்கன்னா, எல்லாரும், இவுங்கதான் அந்தப் பையனோட அம்மான்னு வந்து விசாரிச்சிட்டுப் போவாங்க. அது இரு அழகான நெகிழ்ச்சியான நிகழ்வு.
இந்த உலகத்துல எல்லாமே அழகுதான். ஆனா எந்த அழகும் நிரந்தரம் இல்லை. :) அத நிரந்தரம் ஆக்கணும்னா இதே மாதிரி எல்லாரும் அழகா அழகுப் பதிவு போடணும். அப்படி மாட்டின மூனு பேர்.
1. பூவாகவே ராஜி
2. பாஸ்டன் பாலா
3. மலேசியா மங்கை துர்கா
Friday, April 13, 2007
ஷக்கத்தா இதே மகா....
பதினெட்டுப் பட்டிக்கும் சொன்னது - ஜி ... பஞ்சாயத்து பண்ண நேரம்... 5:09 AM
வழக்கு... சங்கிலித் தொடர்
Subscribe to:
Post Comments (Atom)

54 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...
boots potha punai.u said u wont be blogging.eppadi adikadi vanthu kalakuvathu eppadi?
//பெண்கள் - அழகு என்ற வார்த்தையைக் கேட்டவுடனே டக்குன்னு ஞாபகத்துக்கு வர்றது பெண்கள்தான். அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க.//
மொத்ததில் எல்லாரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்கீங்கப்பூ
யப்பா ராசா,
புலி தேவ் எல்லாரையும் மத்தவங்க கூப்பிட்டாச்சு. வேற யாரையாவது பிடியும். அதுக்குள்ள நான் போய் உம்ம பதிவை படிச்சிட்டு வரேன்.
எனக்குத் தெரிஞ்சு நீங்கதான் 25ஆவது அழகுப் பதிவு போடும் ஆளு. வாழ்த்துக்கள்.
அது என்ன சாதனை? அதையும் சொல்லி இருக்கலாமில்ல. சுயதம்பட்டம் அப்படின்னு சொல்லியாச்சு, அதை முழுசாவாவது பண்ணித் தொலைங்க. சஸ்பென்ஸ் தாங்கலை. :)
கலக்கறீங்க தலை!!
நீங்க பேப்பர்ல செய்தி வர அளவுக்கு பெரிய ஆள்னு எனக்கு தெரியாம போயிடுச்சே!!
நீங்க உண்மயாவே பெரிய தல தான்னு சொல்லுங்க!!! :-)
ரொம்ப நல்லா இருக்கப்பா அழகு எல்லாம்.
இத்தனை நாளா இந்த திறமைய எல்லாம் எங்க ஒளிச்சி வச்சிருந்த ஜி!
இவ்ளோ அழகா எழுதற நீங்க தினமும் ஒரு பதிவு போட்டு மக்கள மகிழ்ச்சில ஆழ்த்த வேணாமா!
//இந்தப் பதிவு ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருந்ததுனா, அதுக்கு பதிவர் தம்பிதான் பொறுப்பு//
அவ்ளோதானா? இன்னும் கொஞ்ச எக்ஸ்ட்ராவா பீல் பண்ணியிருக்கலாமே!
சரி விடு அடுத்த தபா கரெக்டா செய்யணும் சரியா...
அழகு. அழகு. அது சரி. அந்தப் பாளை மாணவன் செய்த சாதனை என்னவோ? சொன்னாத் தெரிஞ்சிக்கிருவம்ல.
விஜய் மாதிரி சட்டை....ம்ம்...பொங்கல் திருவிழால சேலை சுடிதார். நடக்கட்டும் நடக்கட்டும். ;-)
மக்கா கலக்கிட்டல....ஒன்னு ஒன்னும் அட்டகாசம் ஜி ;-)
ட்ரைலர் எல்லாம் போட்டு வண்டியில சும்மா வேகமாக போற போல ;)
நினைவு, பருவம், நண்பர்கள், குறும்பு, மொழின்னு கலக்கல்ப்பா ;-)
\\ஒரு செய்தி. 'பாளை மாணவன் சாதனை'. அதிலிருந்து எங்க அம்மா அந்த தெரு வழியா நடந்து போனாங்கன்னா, எல்லாரும், இவுங்கதான் அந்தப் பையனோட அம்மான்னு வந்து விசாரிச்சிட்டுப் போவாங்க. அது இரு அழகான நெகிழ்ச்சியான நிகழ்வு.\\
ஆஹா....ஜி முதல்ல இதுக்கு ஒரு விளக்கமா தனிப்பதிவு போடு ;)
@துர்கா|thurgah
//boots potha punai.u said u wont be blogging.eppadi adikadi vanthu kalakuvathu eppadi?//
enna panrathu ammani... naane summa irunthaalum Gopi maathiri annaatchi nammala seendi vittuduraanga :((
//மொத்ததில் எல்லாரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்கீங்கப்பூ //
இருக்காதா பின்னே? நான்கெல்லாம் தமிழ் மண்ணின் மைந்தர்கள் :))
------------------------
@இலவசக்கொத்தனார்
//புலி தேவ் எல்லாரையும் மத்தவங்க கூப்பிட்டாச்சு.//
வேற மக்களப் புடிச்சாச்சு :)
//எனக்குத் தெரிஞ்சு நீங்கதான் 25ஆவது அழகுப் பதிவு போடும் ஆளு. வாழ்த்துக்கள். //
அட.. இது வேறையா? அருமை... வாழ்த்துக்கள் டூ மீ....
//அது என்ன சாதனை? அதையும் சொல்லி இருக்கலாமில்ல. சுயதம்பட்டம் அப்படின்னு சொல்லியாச்சு, அதை முழுசாவாவது பண்ணித் தொலைங்க. சஸ்பென்ஸ் தாங்கலை. :) //
அது ஒன்றும் இல்லீங்கோ... பனிரெண்டாம் வகுப்புப் பொது தேர்வுல உயிரியல் பாடத்துல மாநிலத்துல ரெண்டாவது ரேங்க...
---------------------------
@CVR
//நீங்க பேப்பர்ல செய்தி வர அளவுக்கு பெரிய ஆள்னு எனக்கு தெரியாம போயிடுச்சே!!//
அது ரொம்ப ஈஸிங்க. எதாவது மீட்டிங் நடக்கும்போது கேமரா பக்கத்துல போய் நின்னுட்டாப் போச்சு :))
//நீங்க உண்மயாவே பெரிய தல தான்னு சொல்லுங்க!!! :-) //
என்னோட தல சின்னதுதாங்க.. பெருசெல்லாம் இல்ல :))
சக்கத்து செனாகித்து மகா......
சொல்ப கல்சா'இது ...ஆமேலே பர்த்தீனி :) வெயிட் மாடு கனோ :)
@தம்பி
//ரொம்ப நல்லா இருக்கப்பா அழகு எல்லாம். //
எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான் :))
//இத்தனை நாளா இந்த திறமைய எல்லாம் எங்க ஒளிச்சி வச்சிருந்த ஜி!
இவ்ளோ அழகா எழுதற நீங்க //
இது வஞ்சப் புகழ்ச்சி அணிதானே :)
//தினமும் ஒரு பதிவு போட்டு மக்கள மகிழ்ச்சில ஆழ்த்த வேணாமா!//
ஒரு பதிவு போடுறதுக்கே இங்க பெரும்பாடா இருக்குது.. இதுல தினமும் ஒன்னா? இனி அடுத்தது யாராவது தொடர் விளையாட்டுல கூப்பிட்டாதான் அடுத்தப் பதிவே :)
//அவ்ளோதானா? இன்னும் கொஞ்ச எக்ஸ்ட்ராவா பீல் பண்ணியிருக்கலாமே!//
நீ கொடுத்தக் காசுக்கு இதுவே அதிகம் :))
-------------------------
@G.Ragavan
//அந்தப் பாளை மாணவன் செய்த சாதனை என்னவோ? சொன்னாத் தெரிஞ்சிக்கிருவம்ல.//
கொத்தனாருக்குப் போட்ட பதில்ல இருக்குது பாருங்கோ :))
//விஜய் மாதிரி சட்டை....ம்ம்...பொங்கல் திருவிழால சேலை சுடிதார். நடக்கட்டும் நடக்கட்டும். ;-)//
அதெல்லாம் அப்ப நடந்தது.. இப்பெல்லாம் அது மாதிரி வாழ்க்கை சுவாரஷ்யமா இல்ல...
---------------------------
@கோபிநாத்
//ட்ரைலர் எல்லாம் போட்டு வண்டியில சும்மா வேகமாக போற போல ;) //
வேற நீங்க கொடுத்த வண்டியாச்சே :))
//ஆஹா....ஜி முதல்ல இதுக்கு ஒரு விளக்கமா தனிப்பதிவு போடு ;) //
தனிப்பதிவளவிற்கெல்லாம் அது பெரிய மேட்டர் இல்ல கோபி..
en peyar eppadi eppo mathum vanthathu.ithu cheating.
//அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க//
thats the absolute truth....
even though a formal mini skirt sky rockets your heart rate...seeing a pavadai thavani figure gives wings to ur heart
just being nostalgic...nevermind
மலேசியா மங்கையா?பொய் மன்னா ஏன் அய்யா உமக்கு என் மேல் இந்த கொல வெறி.
ஜியா,
நல்லா எழுதிருக்கே'ப்பா :)
//பெண்கள் - அழகு என்ற வார்த்தையைக் கேட்டவுடனே டக்குன்னு ஞாபகத்துக்கு வர்றது பெண்கள்தான். அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க.//
உண்மை..உண்மையை தவிர வேற ஒன்றுமில்லை :)
//"விஜய் போட்டிருக்குற சட்டை மாதிரியே வாங்கித் அனுப்புங்கப்பா"னு சொல்லுவேன்.//
ஆஹா..இங்க ஒரு விஜய் ரசிகர் மாட்டிருக்கான்'டோய்.. எல்லாரும் ஓடியாங்க.. :)
//கண்ணே இல்லாதவன், பொக்கை வாய் இதெல்லாம் நெனச்சுப் பாத்தா, நம்மதான் உலகத்துல அழகன்/அழகியே.//
ரீப்பிட்டு....
//அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க.//
என் இனம்டா நீ.... :-)
//கடைசி நாள் அந்த இடத்தவிட்டு வர்றதுக்கு மனசே இருக்காது.//
N.S.S. இருந்த மூன்று வருட கேம்ப்லயும் இதை நான் பீல் பண்ணி இருக்கேன். வெள்ளேந்தி மக்கள் கிராம மக்கள் தான்....
இந்த குறும்புல எதிர் வீட்டு மிஸ் ஆகுதே ஏன் ஜி..........
//மொத்ததில் எல்லாரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்கீங்கப்பூ //
இது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வருத்தம்..... மேன் மக்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் என்ன ஆச்சரியம் சொல்லுங்க....
//புலி தேவ் எல்லாரையும் மத்தவங்க கூப்பிட்டாச்சு. வேற யாரையாவது பிடியும். அதுக்குள்ள நான் போய் உம்ம பதிவை படிச்சிட்டு வரேன். //
நாலு பெயரு நம்மளை கூப்பிட்டாங்கனு பெருமையா சொல்லாம் பாத்தா விட மாட்டீங்களே கொத்துஸ் நீங்க.......
////ஆஹா....ஜி முதல்ல இதுக்கு ஒரு விளக்கமா தனிப்பதிவு போடு ;) //
தனிப்பதிவளவிற்கெல்லாம் அது பெரிய மேட்டர் இல்ல கோபி.. //
நீ இருந்தாலும் தன்னடக்கத்திற்கும் கிழ போறப்பா ஜி....
kalakiteenga Z!
supera solli irukeenga:)
ippo ontha tag thaan oorengum pechu pola! enga paathalum ithu thaan!
//பெங்களூரில் இருக்கும் அப்பாக்கு விஜய் படத்த அனுப்பி வச்சு, "விஜய் போட்டிருக்குற சட்டை மாதிரியே வாங்கித் அனுப்புங்கப்பா"னு //
athu oru alagiya nila kaalam! ippelam namakku romba vayasu aayiduchu ;)
Adada.. azhagaana padhivu :)
//அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க.//
Aanalum idhukkaga projectayae izhuthu moodittu vandhadhellam konjam over :-)
Azhagu padhivu azhagavae irukku anna...
Raji.R
அழகான நினைவு
Naan sollalaamunu ninaichudhu ellam neenga solliteengalae ...
அழகான நண்பர்கள்
//அதே மாதிரி தியாகச் செம்மலா ஒரு நண்பன் இருக்கான். நாமெல்லாம் எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு எடுக்குற முயற்சில கண்டிப்பா சில ஆட்களுக்கு கெட்டவனாயிடுவோம்.//
Unmai..
//ஆனா எல்லார் கூடவும் நல்லவனா இருந்தது அவன் ஒருத்தந்தான். அகத் தோற்றத்துலையும் சரி, புறத் தோற்றத்திலையும் சரி, அவன் அழகை மிஞ்ச ஆளே கிடையாது.//
Hats off to that person...Ellarukkum idhu maadhiri frnds kidaikka maatanga...
அழகான குறும்புகள்
//அம்மா கொடுக்குற காச ஐஸ் வாங்கி தின்னுட்டு, லாரி ஏறி போனது. நொச்சி மேட்டுல புகைவண்டி விட்டது. ஆற்றில் மீன் பிடிச்சுட்டு வந்து அம்மாக்கிட்ட அடி வாங்குனது//
Romba chinna chinna vishayatha kooda evalavu azhaga solli irukeenga...
அழகான மொழி
Tamilukkum amudhaendru paerunu summa sollirukaanga..
Yup true malayalaam is also a nice lang...
அழகான நெகிழ்வு
Nijamavae azhagana naegizhvu dhaan na adhu dhaan...
Neenga state 2nd eduthadha pathi thaanae pottu irukeenga ...Apada unmaya moolusa udachachu...
Trailer-u main scenenu pottu thakki irukeenga...
Naanum sollaraen anna...
@இராம்
//சக்கத்து செனாகித்து மகா......
சொல்ப கல்சா'இது ...ஆமேலே பர்த்தீனி :) வெயிட் மாடு கனோ :)//
அவ்தா.. ஆயித்து...ஆமல பன்னி...
//நல்லா எழுதிருக்கே'ப்பா :)//
நன்றி மக்கா
//உண்மை..உண்மையை தவிர வேற ஒன்றுமில்லை :)//
என் இனம்யா நீ...
//ஆஹா..இங்க ஒரு விஜய் ரசிகர் மாட்டிருக்கான்'டோய்.. எல்லாரும் ஓடியாங்க.. :) //
அது அப்போ.. இப்பெல்லாம் நாம ரஜினி+சூர்யா...
------------------------
@துர்கா|thurgah
//en peyar eppadi eppo mathum vanthathu.ithu cheating.//
ennathu ithu.. neengathaane en peyara potta 500 singapore dollar thaarennu sonneenga.. ippa bulti adikireenga??
//மலேசியா மங்கையா?பொய் மன்னா ஏன் அய்யா உமக்கு என் மேல் இந்த கொல வெறி. //
அப்படி அழகு போட்டிக்கு கூப்பிடும்போது, என் பேருக்கு முன்னாடி இந்தப் பட்டத்தைப் போடுங்கன்னு சொல்லிப்புட்டு, இப்பொ ஜகா வாங்குனா எப்படி??
-------------------------
@Wyvern
Welcome Wyvern... This is ur first visit.. thanks and do visit often :D
//thats the absolute truth....//
that's what all onsite return guys feel :))
//even though a formal mini skirt sky rockets your heart rate...seeing a pavadai thavani figure gives wings to ur heart//
ada ada ada... U have all the thakuthis to become next vairamuthu :)))
@நாகை சிவா
//என் இனம்டா நீ.... :-) //
இதெல்லாம் நம்மளோட அடிப்படை அமைப்பு. :)) அது மாறுமா என்ன??
//N.S.S. இருந்த மூன்று வருட கேம்ப்லயும் இதை நான் பீல் பண்ணி இருக்கேன். வெள்ளேந்தி மக்கள் கிராம மக்கள் தான்....//
அட... நீங்களுமா? முற்றிலும் உண்மை...
//இந்த குறும்புல எதிர் வீட்டு மிஸ் ஆகுதே ஏன் ஜி.......... //
மூச்ச்ச்ச்ச்ச்... இதெல்லாம் நமக்குள்ள இருக்கணும்.. வெளில தெரிய கூடாது...
//மேன் மக்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் என்ன ஆச்சரியம் சொல்லுங்க.... //
அதேதான் நானும் சொல்றேன்.. எந்நாளும் மென்மக்கள் மென்மக்களே...
//நீ இருந்தாலும் தன்னடக்கத்திற்கும் கிழ போறப்பா ஜி.... //
நமக்கு இந்த தற்பெருமை புடிக்காது இல்லையா? அதான் ;))))
adaada azhagai pathi romba azhagaa ezhuthi irukeenga
@Dreamzz
//ippo ontha tag thaan oorengum pechu pola! enga paathalum ithu thaan!//
appadiyaa?? sollave illa... ada.. neenga vera... nammaloda supera ellaarum pattaasu kelapuraanga...
//athu oru alagiya nila kaalam! ippelam namakku romba vayasu aayiduchu ;) //
ada.. enna ippadi salitchikireenga... ippa oru step extrava vanthirukkoam avlavuthaan ;)))
---------------------------
@G3
//Aanalum idhukkaga projectayae izhuthu moodittu vandhadhellam konjam over :-) //
enna ippadi sollipotteenga.. enga kolgaikkaaga uyiraiyum kodukkum kolgai veerarkal naangellaam :))))
-----------------------------
@Raji.R
//Azhagu padhivu azhagavae irukku anna...//
vaamma minnal.. epdi irukka?? neeyum ezutha start pannalaamla :))
@ராஜி
//அழகான நினைவு
Naan sollalaamunu ninaichudhu ellam neenga solliteengalae ...//
naan sollalaamnu nenatcha pala visayngala makkals sollitaanga.. enna panrathu?? :))
//Hats off to that person...Ellarukkum idhu maadhiri frnds kidaikka maatanga...//
correct thaan... so athunaalathaan ippavum avunga kooda contacts continue aahitte irukuthu :))
//Romba chinna chinna vishayatha kooda evalavu azhaga solli irukeenga...//
innum neraya irukuthu.... athellaam thani postaa pottudalaamnu mudivu pannitten ;))
//Neenga state 2nd eduthadha pathi thaanae pottu irukeenga ...Apada unmaya moolusa udachachu... //
aaha.. sollittiyaa??? naanthaan erkanave sollitane ;)) athunaala problem illa :))
//enga kolgaikkaaga uyiraiyum kodukkum kolgai veerarkal naangellaam :))))//
Yaaroda uyirannu sonna avangala konjam munnadiyae warn panni veikka vasadhiya irukkum ;-)
அழகுதான் ஜீ.சென்னாகிதே! பிரிகாட் ரோடு பத்தி எழுதுவேன்னு பாத்தேன்..
உன் தமிழ்சீனப்பாட்டு அழகுன்னு என் அழகுப்பதிவுல குறிப்பிட்டிருந்தேனே பார்த்தியா இல்லயா?:)
Forget to ask u something...
//ஷக்கத்தா இதே மகா...."//
Ipdina watnga G....
//vaamma minnal.. epdi irukka?? neeyum ezutha start pannalaamla :)) //
Idho vandhutaen ....
Ennakaena minnal maadhiri palichunu superaavae irukaen na ..
Naan start pannalaamunu dhaan ninaikkuraen anna..But ellarum ellathaiyum solliteengala..So wat to donu theriyala anna...poduraen anna..
@ஷைலஜா
//அழகுதான் ஜீ.சென்னாகிதே! பிரிகாட் ரோடு பத்தி எழுதுவேன்னு பாத்தேன்..//
வாங்கக்கா... ப்ரிகேட் ரோடெல்லாம் கவர்ச்சிதானே.. அது அழகில்லையே... :)))
//உன் தமிழ்சீனப்பாட்டு அழகுன்னு என் அழகுப்பதிவுல குறிப்பிட்டிருந்தேனே பார்த்தியா இல்லயா?:) //
இப்பத்தான் பாத்தேன்க்கா... இந்தியா வந்ததுக்கப்புறம் இணைய வசதி இல்லாததுனால பதிவுலகம் பக்கம் ஒதுங்குறதே கம்மியாயிடிச்சு :((
----------------------------
@ராஜி
//Ipdina watnga G.... //
ithu kooda theriyaathaa.. aiyo.. aiyo... nee bengalurulathaane irukka.. kannada nimku koththilla??
//So wat to donu theriyala anna...poduraen anna.. //
athu ezutha okkaantha thaana varum..
அடடா! சூப்பரா எழுதி இருக்க பா!
ரொம்பவே அனுபவித்து படித்தேன்.
அதனால் இந்த பதிவுல எதுவும் லொள்ளு பண்ண விரும்பலை.
ஜி..
இப்போதான் இந்த அழகுராஜாவின் அழகான அழகு போஸ்ட்டு படிச்சேன்.. :-)
டிரேய்லர்.. மெயின் ஷோன்னு ரெண்டா பிரிச்சு எழ்ஹியதும் ஒரு அழகுதான். :-)
மொத்தத்துல எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காம மொத்ததியும் நீங்களே எழுதிட்டீங்க.. இப்போ நாங்க என்ன எழுதுதுறதுன்னு யோசிக்க வச்சுப்புட்டீங்க..
// nee bengalurulathaane irukka.. //
Aamam naan B'lore dhaan irukaen..
//kannada nimku koththilla??//
Sulpa kodhdhum...
sakktha (awesome) Courtesy:inaiku vandha fwd mail...
magha na?
how do you maintain your entire blog in tamil??? it took me 20 mintues to compose my poem in proper tamil!
//அழகு என்ற வார்த்தையைக் கேட்டவுடனே டக்குன்னு ஞாபகத்துக்கு வர்றது பெண்கள்தான். அமெரிக்கா போயிட்டு இந்தியா திரும்பி வந்ததும், இங்க இருக்குற பெண்கள் இன்னும் அழகா தெரியிறாங்க//
அப்போ அமெரிக்கா போய்ட்டு வந்தாதான் நம்ம ஊர் பெண்கள் அழகா தெரிவாங்கன்னு சொல்றீங்களா...சும்மா ஒரு டவுட்டு :-)
//எனக்கு அமைந்த எல்லா நண்பர்களும் மத்தவங்களுக்கு கிடைத்த நண்பர்களை விட ஒருப் படி அருமையானவங்கன்னு சொல்லுவேன்//
இது எல்லோருக்கும் ஒத்துவரும்ன்னு நினைக்கறேன் :-)
49...
50...Have a nice day...
@ambi
//அடடா! சூப்பரா எழுதி இருக்க பா!
ரொம்பவே அனுபவித்து படித்தேன்.//
உங்களையே உருக வச்சிடிச்சா என்னுடைய பதிவு (இதில் உள்குத்து இல்லை :))
------------------------
@.:: மை ஃபிரண்ட் ::.
//இப்போதான் இந்த அழகுராஜாவின் அழகான அழகு போஸ்ட்டு படிச்சேன்.. :-) //
இப்பவாவது படிச்சீங்களே :))
//மொத்தத்துல எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காம மொத்ததியும் நீங்களே எழுதிட்டீங்க.. இப்போ நாங்க என்ன எழுதுதுறதுன்னு யோசிக்க வச்சுப்புட்டீங்க.. //
எனக்கு வாய்ப்பு கொடுக்காம எல்லாத்தையும் மக்கள் எழுதிட்டாங்கன்னுதான் அத ட்ரைலர்ல போட்டுட்டு, புதுசா நான் படம் ஓட்டுனேன். நீங்களும் அதே மாதிரி ஒக்காந்து யோசிங்க :))
--------------------------
@ராஜி
//sakktha (awesome) Courtesy:inaiku vandha fwd mail...//
avvalavu fwdsaa...
//magha na?//
athu summa "matchi' maathiri...
@Nithya N
I don't know which tool have you used to type in Tamil. I use ekalappai (Anjal) tool for typing tamil. It's like typing in tanglish and it'll be converted to Tamil. If you don't have permissions to install the software try this link http://www.higopi.com/ucedit/Tamil.html
if you want more help from me let me know :)) you can also check the link I've specified in the right side of my blog under Notice Board.
-----------------------------
Syam
//அப்போ அமெரிக்கா போய்ட்டு வந்தாதான் நம்ம ஊர் பெண்கள் அழகா தெரிவாங்கன்னு சொல்றீங்களா...//
நாட்ஸ்... ஏன் இப்படி கொளுத்திப் போடுறீங்க?? அது நான் அமெரிக்கா போயிட்டு ரொம்ப நாளா நம்மூரு பொண்ணுங்களப் பாக்காம இருந்ததால வந்த எஃபெக்டு :))
//இது எல்லோருக்கும் ஒத்துவரும்ன்னு நினைக்கறேன் :-) //
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
@Nithya N
I don't know which tool have you used to type in Tamil. I use ekalappai (Anjal) tool for typing tamil. It's like typing in tanglish and it'll be converted to Tamil. If you don't have permissions to install the software try this link http://www.higopi.com/ucedit/Tamil.html
if you want more help from me let me know :)) you can also check the link I've specified in the right side of my blog under Notice Board.
-----------------------------
Syam
//அப்போ அமெரிக்கா போய்ட்டு வந்தாதான் நம்ம ஊர் பெண்கள் அழகா தெரிவாங்கன்னு சொல்றீங்களா...//
நாட்ஸ்... ஏன் இப்படி கொளுத்திப் போடுறீங்க?? அது நான் அமெரிக்கா போயிட்டு ரொம்ப நாளா நம்மூரு பொண்ணுங்களப் பாக்காம இருந்ததால வந்த எஃபெக்டு :))
//இது எல்லோருக்கும் ஒத்துவரும்ன்னு நினைக்கறேன் :-) //
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
கொஞ்சம் லேட்டு... Top 20 Hot Female Athletes: Barstool Sports « Snap Judgment
அப்படியே கிவ்கட்டி வாங்க...