Saturday, March 17, 2007

நானும் சகிராவும்...

அப்பூஸ் அண்ட் அம்மணீஸ்... பாப் இசையுலக மூடிசூடா மன்னி, பொய் சொல்லாத இடுப்பழகி சகிரா இந்த மாசம் இருவத்தஞ்சாந்தேதி இந்தியா வருதாம். வந்து மும்பைல கும்முனு ஒரு குத்தாட்டம் போட போகுதாம். அதப் பாக்குறதுக்கு டிக்கட் வெறும் இந்தியா ருவா 2,650 அப்புறம் 3,650 ருவாயாம்.
'எல, போன பதிவுல போட்ட பாட்ட பாத்துட்டு அம்மணி உன்கூட புதுசா ஒப்பந்தம் எதுனா பண்ணிரிச்சோ'ன்னு கேக்குதியலா. அதுதான் இல்ல மக்கா.

'எல. அப்புறம் எதுக்குல சம்பந்தம் இல்லாம டைட்டில வச்சிருக்க'ன்னு கேக்குதியலா... சத்தப் பொறுங்கடே.

நான் ஏற்கனவே சகிரா அம்மணியப் பாத்து போட்டோலாம் புடிச்சு நம்ம ஆர்க்குட்ல ஃப்ரேம் போட்டு வச்சிருக்கோம்ல. மேட்டர் அது இல்ல. நானும் நம்ம பாரத மாதாவ சந்திக்க வர்றேன். அதான் மேட்டரு.

இங்க ஆணி புடுங்குற எடத்துல திடீர்னு, 'தம்பி கடைய சாத்தியாச்சு. நீ உங்க ஊருக்கு பொட்டியக் கட்டப்பூ'னு சொல்லிட்டானுவ.

'எல.. என்ன சொல்லுதிய? இம்புட்டு நாளும் ஒழுங்கா தான்ல தேவையில்லாத ஆணி, தேவையுள்ள ஆணின்னு மாத்தி மாத்தி புடுங்குனேன். அதுக்குள்ள ஏம்ல சாத்தினிய'னு நானும் கேட்டேன்.

'சுத்தி சப்ளை பண்ற எடத்துல, சுத்திக்கு பயங்கர கெடுபுடியாம். அதுனால இந்தக் கடைய மூடுறோம். உனக்கு வேணும்னா இன்னொரு கடைல பூச்சி புடிக்கிற வேலை இருக்குது. பாக்குதியா'னு கேட்டாவ.

நாம என்னைக்கு போலிஸ்கார் வேலையெல்லாம் பாத்திருக்கோம். நமக்கெல்லாம், பூச்சிய உள்ள வுட்டு, அத போலிஸ்கார் கண்டுபுடிச்சி, அத நச்சுன்னு நடு மண்டைல அடிச்சு கொல்லுறதுலதானே தனி சுகமே இருக்குதுன்னு வேண்டானு சொல்லிட்டேன். :))

இதனால, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்ன சொல்றேன்னா, அடுத்த வாரம் இந்தியா வர்றேன். அண்ணே ராமு, அந்த மதுரை ஒயிலாட்டக் குழுவினர எங்க இருந்தாலும், ஏர்போர்ட் பக்கத்துல இருக்குற பந்தலுக்கு கூட்டி வந்துருண்ணே. ஜிரா தலைமைல, இம்சை அரசி, அருட்பெருங்கோ நம்மள வரவேற்கிறதா சொல்லிருக்காவ. அனானி முன்னேற்றக் கழகம் சார்பா செந்தழல் ரவி பொன்னாடை போத்துவார்னு நெனக்கிறேன். அப்புறம், திருமணம் நிச்சயமான அம்பி பெங்களூர் லீலா பேலஸ்ல சிறப்பு விருந்து தர்றதா சொல்லிருக்காவ. ரொம்ப நன்றி அம்பி சார். இருந்தாலும், உங்க விருந்துக்கு மத்த பதிவுலக மக்காக்களையும் நீங்க சேத்திக்கணும்.

நம்ம பொற்கொடி யக்கோவ், ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருக்காவ. ஏதோ புதுசா தமிழ் பதிவுலகத்துல பீதிய கெளப்புற விளையாட்டாமே. என்னப் பத்தின அஞ்சு விசித்திரமான விசயங்களப் பத்தி சொல்லணுமாம். நானும் ஒக்காந்து யோசிச்சேன். நின்னுக்கிட்டு யோசிச்சேன். ஈவன் படுத்துக்கிட்டுக்கூட யோசிச்சேன். வாய பொழந்து யோசிச்சதுல வாய்ல ஈ போனதுதான் மிச்சம்.

"யாருல அவன் அமெரிக்கால ஏது ஈ னு கேக்குறவன்?? சரி. ஃப்ளை போயிடிச்சுப்பா"

சரி. எதுக்கு இப்படி யோசிச்சு யோசிச்சு நம்ம மூளைய வேஸ்ட் பண்ணனும், நம்ம நண்பன்கிட்ட கேப்போம்னு கேட்டேன்.

"மச்சான்.. வியர்டான விசயம்னா என்னடா?"

"அது கூடவாடா தெரியல... நம்ம வாழ்க்கைலயே எக்கச்சக்க வியர்டான விசயம் நடந்திருக்குடா."

"அப்படியா மச்சி..."

"ஆமா.. நாம காலேஜ்ல பாஸ் ஆனதே விசித்திரமான விசயம்தானே. அதே மாதிரி நமக்கு வேலை கெடச்சது, அமெரிக்கா வந்தது. இது எல்லாமே வியர்டான மேட்டர்தான் மாம்ஸ்"

"அது கரெக்டுதான் மாப்ள. இருந்தாலும் விசித்திரமான குணங்களப் பத்தி எழுதணுமாம்டா"

"லவ்வரே இல்லாம காதல் கவுஜ எழுத முயற்சி பண்றல்ல. அதுவே வியர்ட்தானடா"

சரி. இவன்கிட்ட கேட்டா வேலைக்கு ஆகாதுன்னு நானே கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கேன்.

1. பதிவெழுதுவது. அப்ப.. எங்களுக்கு மட்டும் எழுதுறது என்ன விசித்திரமில்லாத விசயமானு கேக்குதியளா? சத்தப் பொறுங்கப்பா. நான் இதுவரை தமிழ் புத்தகங்களகூட அதிகமா படிச்சது கெடயாது. திடீர்னு அமெரிக்கால கால ஒடச்சி விட்டுட்டானுவ. என்ன பண்றதுன்னு தெரியாம சும்மாக்காச்சிக்கு ஆரம்பிச்சேன். இப்ப, எக்கச்சக்க நண்பர்கள். நான் கூட சில நேரம் யோசிப்பேன். நம்ம ஏன் நமக்கு எடுபடாத இந்த காமெடிய ட்ரை பண்றோம். எதாவது சமுதாய முனனப்போட எழுதலாம்னு யோசிப்பேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்குவேன்

"எல சவுத்து மூதி... நீ பதிவெழுதுறது எழுத்தாளனாகணும்னு இல்லல. சும்மா நட்பு வட்டத்துக்குத்தான். அதுனால சாத்திக்கிட்டு இரு"

2. ஓவர் ஸீன். நான் காலேஜ்ல இருந்தே பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன். காலேஜ்ல ஏதாவது விழா ஏற்பாடு பண்ணாங்கன்னா, முன்னாலயே போய் அரங்கவெளி பின்னால வேலைல ஈடுபடுறதுனா நமக்கு ரொம்ப புடிக்கும். அதுவும் ஏதாவது பொண்ணுங்க இருந்தாங்கன்னா, வேலை இல்லனா கூட பயங்கரமா வேலை செய்ற மாதிரி ஆக்ட் விடுறது. இப்படி ஸீன் போட்டு, எங்க வகுப்புல ஒரு தேர்தல்ல நின்னு, கள்ள ஓட்டுலேயே ஜெயிச்சேன்னா பாத்துக்கோங்களேன். :))

3. சோம்பேறித்தனம். இதுவும் அமெரிக்கா வந்ததுக்கப்புறம்தான். எந்நேரம் பாத்தாலும் மடிக்கணினி முன்னாடியே உக்காந்திருப்பேன். காலைல பல்ல தேய்க்கிறதுக்கு முன்னாடியே நமக்கு இந்த ஆர்க்குட், மின்னஞ்சல், பதிவ கொஞ்சம் மேய்ஞ்சாதான் அப்புறம் காலைல போடுற குட்டித் தூக்கமே வரும். இந்த இணைய போதையால, மத்த வேலையெல்லாத்தையும் அப்படியே பொறத்தால தள்ளிக்கிட்டே இருப்பேன். :((

4. தயக்கம். கோபிண்ணே.. உங்க அஞ்சுல இருந்து சுட்டுட்டேன். நானும் கோபியப் போலத்தான். எந்த ஒரு உதவி கேக்குறதுக்கும் கொஞ்சமில்ல... எக்கச்சக்கமா தயங்குவேன்.

5. குறுகிய நட்பு வட்டம். நான் எப்போதுமே என்னோட அலைவரிசைய ஒத்த மக்களோடதான் எளிமையா பழகுவேன். நான் பதிவெழுத காரணமே அதுதான். இங்க எக்கச்சக்கமா மக்கள் இருந்தாலும் நம்ம அலைவரிசைல யாருமே இல்ல. நான் சின்ன வயசுல இருந்தே அவ்வளவு சீக்கிரத்துல யார்கூடையும் பழக மாட்டேன். இப்ப, நானே ஆச்சர்ய படுற அளவுக்கு அதிகமா இணைய நண்பர்கள் இருக்குறாங்க. :))

இனி இந்த விளையாட்டின் அடுத்தப் பகுதி. 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதுதான் இந்த விளையாட்டின் உயர்மட்டக் கொள்கை. என்னை பொற்கொடி மாட்டி விட்டதுபோல், நானும் ஐவரை மாட்டிவிட வேண்டுமாம். அப்படி நான் நினைத்த ஐவர்

1. 'காதல் மன்னன்' வெட்டிப்பயல்
2. 'கானக் குயில்' மருதம்
3. 'மதுரை இளவரசன்' ராம்
4. 'காதல் ஆராய்ச்சியாளர்' CVR
5. 'இம்சைகள் தொடரும்' இம்சை அரசி.

அடுத்தது இந்தியாவிலிருந்து சந்திக்கிறேன். :))



70 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...

Adiya என்ன சொல்றாங்கன்னா...

he he he :) unga tamil nadai super ingo..

happy journey. and grt8 moments ahead.

மு.கார்த்திகேயன் என்ன சொல்றாங்கன்னா...

Happy Journey Ji..

India-la Nalla enjoy pannunga ji

வெட்டிப்பயல் என்ன சொல்றாங்கன்னா...

ஏன்யா சிக்காகோவில் குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தா கடைய இழுத்து மூடாம என்ன பண்ணுவான்???

என் மேல ஏன் இந்த கொலவெறி உனக்கு??? காதல் கதை எழுதறதை நிறுத்தினாலும் விட மாட்றீங்க. என்னத்த பண்ண???

ராஜி என்ன சொல்றாங்கன்னா...

Great..Happy journey..
Welcome back to Blore :)

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

Machi kaalankaathala seekirama elunchi poitu ravaiku kadaisi vandiye pudichi thirumbi vanthu seru..

Nayagan.

சந்தோஷ் aka Santhosh என்ன சொல்றாங்கன்னா...

என்ன ஜி,
நிலைமை இப்படி ஆகிப்போச்சே ஆகா.. சரி சரி பெங்களூர் கிளை களை கட்ட போகுதூன்னு நினைக்கிறேன். கலக்குங்க. Have a safe trip back.

சுந்தர் / Sundar என்ன சொல்றாங்கன்னா...

Welcome aboard !

Meet you in Air port . Get em the Schedule !

தேவ் | Dev என்ன சொல்றாங்கன்னா...

வாய்யா அமெரிக்கா எஸ்கேப்பா.. நாங்களும் உன்னிய ஒரு கச்சேரி வச்சு வரவேத்துருறோம்...

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//இங்க ஆணி புடுங்குற எடத்துல திடீர்னு, 'தம்பி கடைய சாத்தியாச்சு. நீ உங்க ஊருக்கு பொட்டியக் கட்டப்பூ'னு சொல்லிட்டானுவ//

இந்தியாவுல சொந்தமா ஒரு கடை வைக்க போறிங்கன்னு கேள்விப்பட்டேன். உண்மையா ஜி?

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//நானும் ஒக்காந்து யோசிச்சேன். நின்னுக்கிட்டு யோசிச்சேன். ஈவன் படுத்துக்கிட்டுக்கூட யோசிச்சேன். வாய பொழந்து யோசிச்சதுல வாய்ல ஈ போனதுதான் மிச்சம்.//

சூப்பர்!!!

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//நாம காலேஜ்ல பாஸ் ஆனதே விசித்திரமான விசயம்தானே..//

இது நம்புர விஷயமாவே இல்லையே!!

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//இப்படி ஸீன் போட்டு, எங்க வகுப்புல ஒரு தேர்தல்ல நின்னு, கள்ள ஓட்டுலேயே ஜெயிச்சேன்னா பாத்துக்கோங்களேன்.//

அப்போ நீங்களும் ஒரு தலைவரா ஜி??

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//காலைல பல்ல தேய்க்கிறதுக்கு முன்னாடியே நமக்கு இந்த ஆர்க்குட், மின்னஞ்சல், பதிவ கொஞ்சம் மேய்ஞ்சாதான் அப்புறம் காலைல போடுற குட்டித் தூக்கமே வரும். //

ஆமா. உங்க மடிக்கணிணி உன்க கட்டிலிலேயே இருக்கும்போல.. பேசும்போதெல்லாம். இன்னும் படுத்துட்டிருக்கேன், எழுந்திரிக்கலாமா வேணாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்னு சொல்லுவீங்களே.. (உண்மையெல்லாம் வெளியே சொல்லிட்டேனோ?)

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

//கோபிண்ணே.. உங்க அஞ்சுல இருந்து சுட்டுட்டேன். //

சோ, காப்பி அடிக்கிறது உங்களுடைய ஆறாவது குணம்ன்னு எடுத்துக்கலாமா ஜி? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

நான் டேக் பண்ண நினைச்ச சிலரை மறக்காமல் நீங்க டேக் பண்ணிட்டீங்க.. அவர்கள் எழுதுறதையும் ரசிக்க போறேன். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

Have a safe Journey to India.

See you.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. என்ன சொல்றாங்கன்னா...

Send my regards to your brother and parents. ;-)

CVR என்ன சொல்றாங்கன்னா...

ஏன் ஏன் ஏன்????

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

ஜி..
இந்தியா போறியா ? ;-)

சரிப்பா ஊருல இருக்குற அனைத்து பிகர்களையும் கேட்டதாக சொல்லு என்னா... ;-)))

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

\\அந்த மதுரை ஒயிலாட்டக் குழுவினர எங்க இருந்தாலும், ஏர்போர்ட் பக்கத்துல இருக்குற பந்தலுக்கு கூட்டி வந்துருண்ணே.\\

வந்துருவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

எங்க குல தங்கம் ஓயி,
பாஸ்டன் குல சிங்கம் ஓயி
ஜில் ஜில் ஜி..ஓயியியியியியியி.....ஓஓஓஓஓஓ

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

\\முன்னாலயே போய் அரங்கவெளி பின்னால வேலைல ஈடுபடுறதுனா நமக்கு ரொம்ப புடிக்கும். \\

அது என்னால பின்னால??

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

\\4. தயக்கம். கோபிண்ணே.. உங்க அஞ்சுல இருந்து சுட்டுட்டேன். நானும் கோபியப் போலத்தான். எந்த ஒரு உதவி கேக்குறதுக்கும் கொஞ்சமில்ல... எக்கச்சக்கமா தயங்குவேன்.\\

திருத்தவே முடியாதுடா.....உன்னைய திருத்தவே முடியாது ;-))

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

\\ நான் சின்ன வயசுல இருந்தே அவ்வளவு சீக்கிரத்துல யார்கூடையும் பழக மாட்டேன். இப்ப, நானே ஆச்சர்ய படுற அளவுக்கு அதிகமா இணைய நண்பர்கள் இருக்குறாங்க. :))\\

இது நமக்கும் இருப்பா......அப்புறம் பார்த்து போயிட்டு வா.. இந்த துபாய் பக்கமா வந்துடுன்னா.

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

சோறு போட்ட இந்தியாவை மறந்திடாத ஜியா...
அப்படியே எங்களுக்கும் ட்ரிட் வைக்க மறந்திடாத...
சென்னை பக்கம் உன்னால வரமுடியாட்டி கூட பரவால...
நாங்க பெங்களூருக்கு வரோம்...
என்ன சொல்ற..??

என்றும் அன்புடன்,
செல்வா

ambi என்ன சொல்றாங்கன்னா...

//திருமணம் நிச்சயமான அம்பி பெங்களூர் லீலா பேலஸ்ல சிறப்பு விருந்து தர்றதா சொல்லிருக்காவ.//

ஆஹா! வரவேற்ப்பு தானே தந்துடுவோம்!

வழக்கம் போல பில்லு வர நேரம் நான் உச்சா போக போயிடுவேனாம். நீயி மாவட்டுவியாம். கூட சேர்ந்து மாவரைக்க அங்க ஒரு சூப்பர் பிகர் இருக்குப்பா அதான் சொன்னேன்.
சீக்ரம் ஓகே சொல்லிடு இல்லாட்டி ஷ்யாம் மாவட்ட வந்ருவான்.



// இருந்தாலும், உங்க விருந்துக்கு மத்த பதிவுலக மக்காக்களையும் நீங்க சேத்திக்கணும்.
//
எமக்கு அல்வா குடுத்து தான் பழக்கம், அதுவும் சொந்தமா கிண்டி குடுத்து தான். யாருப்பா அங்கே நான் ரெடி.

வேதா என்ன சொல்றாங்கன்னா...

வாங்க வாங்க:)

இம்சை அரசி என்ன சொல்றாங்கன்னா...

வாங்கோ... வாங்கோ...

welcome to India...

welcome to Bengalooru :)))

செந்தழல் ரவி என்ன சொல்றாங்கன்னா...

எங்க வீட்ல ஒரு அழுக்கு பொன்னாடை இருக்கு...அதை யாருக்காவது போத்தனும்னு எனக்கு ரொம்ப ஆஜை. எப்ப வரீங்க ? மேல்விவரம் கெடக்குமா ?

இராம் என்ன சொல்றாங்கன்னா...

// அண்ணே ராமு, அந்த மதுரை ஒயிலாட்டக் குழுவினர எங்க இருந்தாலும், ஏர்போர்ட் பக்கத்துல இருக்குற பந்தலுக்கு கூட்டி வந்துருண்ணே.///

ஜியி,

ஒன்னையே இந்தியா வரவேற்க பெங்களூரூ ஏர்போர்ட்'லே பெசல் அனுமதி வாங்கி வாடிப்பட்டி மோளம் வாசிப்போமில்லே... அப்புறமாதான் ஒயிலாட்டம் ,கரகாட்டத்தை ஸ்டார்ட் பண்ணுறோம்... :)

நாகை சிவா என்ன சொல்றாங்கன்னா...

//லவ்வரே இல்லாம காதல் கவுஜ எழுத முயற்சி பண்றல்ல. அதுவே வியர்ட்தானடா"//

கோபி, இத நீ நம்பிட்டல, ஆனா வெட்டி தான் நம்ப மாட்டேன் சொல்லுறான்.... ஏம்ப்பா வெட்டி....

Priya என்ன சொல்றாங்கன்னா...

Have a safe trip Z. Veetla ellarayum kettadha sollunga..

நாகை சிவா என்ன சொல்றாங்கன்னா...

ஒரம்போ...ஒரம்போ
ஔஅய்யா வரறார்....
ஏர்போட்டுக்கு அய்யாவ வரவேற்க வரும் எல்லாருக்கும் தலா 100 டாலர் கொடுப்பார். எல்லாம் வரிசையில் நின்னு மறக்காம வாங்கிட்டு போயிடுங்கப்பா!!!!

Priya என்ன சொல்றாங்கன்னா...

// நான் இதுவரை தமிழ் புத்தகங்களகூட அதிகமா படிச்சது கெடயாது.//
adada. Ippadi kalakkaringa ezhuthula.. Patha niraya experience irudha madhiri irundhadhu.

//ஓவர் ஸீன்//
adhan ella pasangalum pannuvingale..


// இப்ப, நானே ஆச்சர்ய படுற அளவுக்கு அதிகமா இணைய நண்பர்கள் இருக்குறாங்க.//
romba correct. Nera pathu pesaravangala avlo easy ya friends akkika mattom. Ana, blog la egapatta friends kidaichirukkanga.
Ellarodayum close a feel panrom.

Bharani என்ன சொல்றாங்கன்னா...

vaanga vaanga india vaanga...katchi saarbula oru periya vizhaku yerpaadu panniduvom :)

Bharani என்ன சொல்றாங்கன்னா...

//நான் காலேஜ்ல இருந்தே பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன். //...enna oru periya manasu ungaluku...idhellam othikareengale...pirkaalathula arasiyaluku varalam :)

Bharani என்ன சொல்றாங்கன்னா...

//எந்த ஒரு உதவி கேக்குறதுக்கும் கொஞ்சமில்ல... எக்கச்சக்கமா தயங்குவேன்//...ada naamalum appadithanappa :)

Bharani என்ன சொல்றாங்கன்னா...

neenga solra ella weirdum ennakum irukappu...idhellam persua sollikituu....

Syam என்ன சொல்றாங்கன்னா...

டபுள் செஞ்சுரி அடிச்ச மாதிரி...ஊருக்கும் போறீங்க...ஷகீராவயும் பார்க்கலாம்...அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேனும்...நல்லா இருங்கப்பு :-)

Syam என்ன சொல்றாங்கன்னா...

//சீக்ரம் ஓகே சொல்லிடு இல்லாட்டி ஷ்யாம் மாவட்ட வந்ருவான்.//

மாவு வழிச்சு போட ஒரு நல்ல பிகர் இருந்தால்...நான் 24 மணி நேரமும் மாவாட்ட ரெடி :-)

தம்பி என்ன சொல்றாங்கன்னா...

//நான் ஏற்கனவே சகிரா அம்மணியப் பாத்து போட்டோலாம் புடிச்சு நம்ம ஆர்க்குட்ல ஃப்ரேம் போட்டு வச்சிருக்கோம்ல.//

அந்த சினிமாக்காரங்கதான் தனக்குத்தானே போஸ்டர் அடிக்கறாங்கன்னா நீயுமா?

நல்லபடியா ஊருக்கு போய் சேர் மாப்ஸ்!

Arunkumar என்ன சொல்றாங்கன்னா...

Have a safe trip back. thara thambattaigal kizhindhu thonga vendum :)

nammooru figures ellam kettadha sollupa.. paathu emma naalaachu :(

Arunkumar என்ன சொல்றாங்கன்னா...

//
எங்க குல தங்கம் ஓயி,
பாஸ்டன் குல சிங்கம் ஓயி
ஜில் ஜில் ஜி..ஓயியியியியியியி.....ஓஓஓஓஓஓ
//

@Gopi,
ROTFL :)
kalakittinga !!!

Arunkumar என்ன சொல்றாங்கன்னா...

Jigu Jigu Jikkan Ji,
India poi enjoy pannunga Jiya :)

dubukudisciple என்ன சொல்றாங்கன்னா...

hi ji!!
vaanga vaanga..
india vareengala??

dubukudisciple என்ன சொல்றாங்கன்னா...

bengaluruke vareengala??
mayilaatam, oyilaatam enna??
ungalakaga madurailernthu rendu moonu kondu vanthu niruthi adunga kaiyala unga nethila kumkuma potu vechu aarthi eduthu maalai potu varavarpu kuduthuduvom

dubukudisciple என்ன சொல்றாங்கன்னா...

//நானும் ஒக்காந்து யோசிச்சேன். நின்னுக்கிட்டு யோசிச்சேன். ஈவன் படுத்துக்கிட்டுக்கூட யோசிச்சேன். வாய பொழந்து யோசிச்சதுல வாய்ல ஈ போனதுதான் மிச்சம்.//
ROTFL

dubukudisciple என்ன சொல்றாங்கன்னா...

//நான் காலேஜ்ல இருந்தே பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன்.//
ippadi ellam unmaiya othukareengale.. romba naalavan pa neeyi.. avvvvvvvvv

dubukudisciple என்ன சொல்றாங்கன்னா...

blog ulagathula irukura athanai perukume nalla nanbargal kidaithullargal.. ada ellarum nalla muraila maintain pannanum....
ippo parunga neengale enaku oru nalla nanbar thaane!!!

G.Ragavan என்ன சொல்றாங்கன்னா...

வருக வருக. ஜியே வருக. பெங்களூர் மாநகரமே கதிகலங்க வருக. மயில், குயில், ஒயில், கரகம், பரதம், குச்சுப்பிடி (போலீஸ்காரங்க கைல இரூக்கும். கூட்டத்துல பாதுகாப்பு வேணும்ல), கதக்களி ஆகிய ஆட்டங்களும் பாட்டங்களும் மிகப்பெரிய பேனர்களும் தட்டிகளும், பெங்களூர் ஏர்போர்ட் ரோடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது நண்பர் குழாம் தலைமையில் கூடி உங்களை வரவேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருக. வருக. வரும் போது ஷகீராவையும் கூட்டிக்கிட்டு வர்ரீரே. பெரிய ஆளுதான்.

அது சரி. இந்த வியர்டுல நாந்தான் கூப்பிட்டிருக்கேனே. அதுக்குள்ள என்ன அவசரம்? சரி. வேற யாரையாவது கூப்புடுறேன்.

கோபிநாத் என்ன சொல்றாங்கன்னா...

\\நாகை சிவா said...
//லவ்வரே இல்லாம காதல் கவுஜ எழுத முயற்சி பண்றல்ல. அதுவே வியர்ட்தானடா"//

கோபி, இத நீ நம்பிட்டல, ஆனா வெட்டி தான் நம்ப மாட்டேன் சொல்லுறான்.... ஏம்ப்பா வெட்டி....\\

ஏன் வெட்டி....ஏன்????? அப்படின்னா ஜி க்கு............இருக்கா??

Dreamzz என்ன சொல்றாங்கன்னா...

கடசியா மேட்டர உடைச்சிட்டீங்க! OK BON VOYAGE.. oorukku pona pinna nammala ellam marandhidhala! appappa blog podu! touch vechuko!

Dreamzz என்ன சொல்றாங்கன்னா...

poitu seekirma vaanga!

apparam starting news juper! too bad i cant be in mumbai then :((

கீதா சாம்பசிவம் என்ன சொல்றாங்கன்னா...

என்னங்க இது? ஊர்ப்பக்கம் வந்திருக்கீங்க சொல்லவே இல்லை? வரவேற்புக் கொடுத்திருக்கலாம் இல்லை?
இன்னிக்கு நீங்க 5-வது வியர்டு. தலை எழுத்து எல்லாம். :))))))))))

மணி ப்ரகாஷ் என்ன சொல்றாங்கன்னா...

அப்பு ஊருக்கு போறீகளா..,,,ம் கலக்கு.. என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

//நம்ம மூளைய வேஸ்ட் பண்ணனும், நம்ம நண்பன்கிட்ட கேப்போம்னு கேட்டேன்//

மூளை அப்படினா என்னப்பு?

//எப்போதுமே என்னோட அலைவரிசைய ஒத்த மக்களோடதான் எளிமையா பழகுவேன்//

என்ன அலைவரிசை? சூரியன் ஆர் ஹலோ ?
இப்ப எல்லாம் பண்பலை வரிசைதான் டாப்ல இருக்கு

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....

அவசர பயணம்ங்றதால கொஞ்சம் பழு அதிகம். அதுனால நான் இந்தியா வந்திறங்கினதுக்கப்புறம் பதில் பின்னூட்டம் போடுறேன் எல்லாருக்கும்.

அதுவரைக்கும் நன்றி... வாழ்க...

Marutham என்ன சொல்றாங்கன்னா...

Ayya LATE'U :D
Manikanum.. :)

Hm... Aaga neenga shakirava vidradha illa...hips don't lie..but u keep lying :P - ungaluku avunga mela oru kannu dhaney!! :P

hehe...

Marutham என்ன சொல்றாங்கன்னா...

Enna idhu neenga paatu ezhudhradhu wierd'nu soliteenga :))
Appo naan padradhu weirdo weirdu :P

Back to the post.. ;)

Marutham என்ன சொல்றாங்கன்னா...

//வாய பொழந்து யோசிச்சதுல வாய்ல ஈ போனதுதான் மிச்சம்.

"யாருல அவன் அமெரிக்கால ஏது ஈ னு கேக்குறவன்?? சரி. ஃப்ளை போயிடிச்சுப்பா"//
LOL!!
ROTFL!!

Marutham என்ன சொல்றாங்கன்னா...

First weird- othuka mudiyadhu :P
2)ஓவர் ஸீன்.- haha idhu vaasthavam..anaal vera oru doubt'u..
Pasangaluku - and sila ponungaluku idhu weird kedayadhey :P All in blood matter achey :P
3) சோம்பேறித்தனம்- idhu ruled out :P Appo naanga elarum weirdo dhaan:P

Marutham என்ன சொல்றாங்கன்னா...

Kadasila soneengaley ... :) //நான் சின்ன வயசுல இருந்தே அவ்வளவு சீக்கிரத்துல யார்கூடையும் பழக மாட்டேன். //Naanga elaarum irukom'la..
ini apdi irukadhu :)
குறுகிய நட்பு வட்டம். நான் எப்போதுமே என்னோட அலைவரிசைய ஒத்த மக்களோடதான் எளிமையா பழகுவேன்.
:d unga tv fine tune pani paarunga..en frequency match agudhanu ;)
Agalana...vera TV plz.. :D

Marutham என்ன சொல்றாங்கன்னா...

:) Sari... neenga soli ezhudhama pona adhu mariyadhaya?
India vandhu paarunga... idhu wierdo tag dhaan...but konjam different :)
Sariya...
Naanum ooruku kelambings - oruthara kalam poora mati vidra function :P adhan kalyanamamey!.. Will write ur tag b4 leaving to native :)
Also oru paatu :) will be up!
Cheers
~~ Happy journey!! ~~

பொற்கொடி என்ன சொல்றாங்கன்னா...

adade home work potacha?? varen.

பொற்கொடி என்ன சொல்றாங்கன்னா...

aah! india poringla?? sari sari 80/100 kudukren. konjam naan solra saaman ellam anuppi vekringla?? ;)

சேதுக்கரசி என்ன சொல்றாங்கன்னா...

எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-)

ramya என்ன சொல்றாங்கன்னா...

romba naala varalanu ninaicha neenga india vareenganu super news sollirukeenga...so happy journey....njy n welcum to our country..

ராஜி என்ன சொல்றாங்கன்னா...

1.//பதிவெழுதுவது.//
//நான் இதுவரை தமிழ் புத்தகங்களகூட அதிகமா படிச்சது கெடயாது. திடீர்னு அமெரிக்கால கால ஒடச்சி விட்டுட்டானுவ. என்ன பண்றதுன்னு தெரியாம சும்மாக்காச்சிக்கு ஆரம்பிச்சேன். இப்ப, எக்கச்சக்க நண்பர்கள். //

Naanum idhu maadhiri blog ezhuha aaramichava dhaan na...

2.//ஓவர் ஸீன்.//

Adhu paeru over scene illa na...Over sincerity...

Namba Deptla edhu nadandhaalum ..romba sincere ah work pannuveenganuradhu ellarukkumae therinja vishyamaachae...

3.//சோம்பேறித்தனம்.//
Naatula paathi paeru ipdi thaan pa irukkaanga...

4.// தயக்கம். //
5.//குறுகிய நட்பு வட்டம்.//

4 n 5 are oru vagayila related to one another....

Aana neenga poturukaradhu except 2 yellamae nambala sollura madhiriyae irukka,adhunaala idhu yellam weird aana vishyamaa ennala yethukka mudiyalayae na...

தூயா என்ன சொல்றாங்கன்னா...

இந்தியா திரும்புவதில் இத்தனை சந்தோசமா?:) இருக்குமே குடும்பம், நண்பர்கள் என்று இருப்பதில் தானே சுகம்.

(நீங்க தானாக்கும் எங்க ராமண்ணன டாக் பண்ணினது)

ராஜி என்ன சொல்றாங்கன்னா...

Yepdi na irukkenga?
Travel yellam yepdi irundhuchu?
Blog pakkam aalae kannoom?

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

எல்லாருக்கும் நன்றி.. நான் இந்தியா வந்திறங்கிட்டேன். :)))

Muruganandham என்ன சொல்றாங்கன்னா...

மச்சி ரொம்ப சந்தோஷம் இந்தியா செல்வதற்கு.

அப்புறம், என்ன இது எல்லாருக்கும் இருக்கிற பழக்கங்களையே எழுதியிருக்க??