Thursday, December 7, 2006

8. சீனத்துத் தமிழ்ப் பாட்டு!!

யூடிய்புல ஏ.ஆர். ரகுமானைப் பற்றியப் படங்களைத் (தூயத் தமிழில் நிகழ்பட துண்டு) தேடிக்கிட்டு இருந்தேன். அப்ப ஒரு சைனா பாட்டு ஒன்னு கெடச்சிது. நம்மாலு சும்மா கும்முன்னு நம்மூரு ஸ்டைல்லக் குத்த, அத ஒரு சீனத்துப் பைங்கிளிப் பாட, சைனா மீச ஒன்னு வாளை வச்சிட்டு 'சதக் சதக்'னு ஆக்ட் கொடுத்துட்டு இருந்துச்சு.

ஏற்கனவே ரகுமானோட ரசிகனானதால அந்தப் பாட்டைத் திரும்ப திரும்பக் கேட்டுக்கிட்டே இருந்தேன். சரி, நமக்கு பாத்ரூம்ல பாடுறதுக்கு வசதியா இருக்குமேன்னு, மனப்பாடம் பண்ணிப் பார்த்தேன்.

"ம்ம்ஹூ", மண்டைல ஏறவே இல்ல. அப்பத்தான்

"தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!".

யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வர, நாம ஏன் அந்த மெட்டுக்கு ஒரு தமிழ்ப் பாட்டு எழுதக் கூடாதுன்னு நெனச்சி ஒருப் பாட்டு ஒன்ன எழுதினேன். அந்தப் பாட்டு இப்போது உங்கள் பார்வைக்கு.

["அப்படியெல்லாம் சிரிக்கப் படாது"]

இந்தப் படத்துல் வர்றப் பாட்டை ஒரு பொண்ணு பாடியிருப்பாள். நான் எழுதுனப் பாட்டு ஒருப் பையன் பாடுற மாதிரி இருக்கும். அங்க இங்க கொஞ்சம் சுதி சேராம இருக்கும். நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்.



நிலவின் முகமூடியோ?
மழையின் நிலச் சாரலோ?
நதியின் இசைப் பாடலோ?
பாலைவனத் தனலும் நீயோ?

[ஹம்மிங்]

வந்து வந்துப் போகிறாய்!
வந்தப் பின்னே மாய்கிறாய்!
எந்தன் கண்ணும் மாயம் கொண்டதோ?
உந்தன் பிம்பம் அழியா ஓவியம்!

சுவாசக் காற்றைத் திருடினாய்!
ஆக்ஷிஜனோடு நுழைகிறாய்!
நீயே எந்தன் மொத்தம் ஆகிறாய்...

பனியும் மழையும் ஓய்ந்தாலும்
நினைவில் மறைய மறுக்கிறாய்!
நீயெந்தன் உயிருக்கு உரமாகிறாய்...

கானல் நீராய் மறைந்தாலும்
கல்லறையில் கிடந்தாலும்
தட்டி தட்டி எழுப்பும் தேவதை...

உனை நீங்கிய நொடிகள் யாவுமே, பல யுகங்களே!
உன் பெயர் இல்லாச் சொற்களோ, பழிச் சொற்களே!
என் காதலே!

வந்து வந்துப் போகிறாய்!
வந்தப் பின்னே மாய்கிறாய்!
எந்தன் கண்ணும் மாயம் கொண்டதோ?
உந்தன் பிம்பம் அழியா ஓவியம்!

கோடைக் காலம் வந்தாலும்
பாலைவனமாய் இருந்தாலும்
சில்லென வீசுதே வாடைக் காற்றே...

கானல் நீராய் மறைந்தாலும்
கல்லறையில் கிடந்தாலும்
தட்டி தட்டி எழுப்பும் தேவதை...

உனைக் காணா கண்கள் இரண்டுமே, தூங்க மறுக்குதே!
உனைக் கண்ட அந்த நிமிடமே, ஊமை யானதே!
என் காதலே!

நிலவின் முகமூடியோ?

நிலவின் முகமூடியோ?
மழையின் நிலச் சாரலோ?
நதியின் இசைப் பாடலோ?
பாலைவனத் தனலும் நீயோ?

[ஹம்மிங்]

பி.கு: யாராவது பாடகர்கள் இருந்தீங்கன்னா, அப்டியே இந்தப் பாட்டை ரீ-மிக்ஸ் பண்ணிக் கொடுங்கப்பா :)



33 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...

Divya என்ன சொல்றாங்கன்னா...

மணிரத்தினம் படம் பார்த்த effect.

தமிழ் பாடல் வரிகள் உங்களோடதா??? அருமையாயிருக்கு வரிகளிலுள்ள வார்த்தைகள்.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Divya said...
மணிரத்தினம் படம் பார்த்த effect.//

அட! நீங்களும் நம்மாளா?

//தமிழ் பாடல் வரிகள் உங்களோடதா???//

இந்த நக்கல்தானே வேண்டாங்குறது.
நாந்தாங்க எழுதுனேன். இதுக்காக 3 மணி நேரம் செலவு பண்ணினேன்.

//அருமையாயிருக்கு வரிகளிலுள்ள வார்த்தைகள். //

உங்க ரமேஷ்-ரம்யா காதலுக்கு பாட்டு வேணும்னா சொல்லுங்க. ஒருப் பாட்டுக்கு அம்பது டாலர்தான் :)

.:: My Friend ::. என்ன சொல்றாங்கன்னா...

இது Warrior of Heaven & Earth-தானே?

அருமையாய் இருக்கு வரிகள்..
அற்புதமாக புருந்துது இந்த இசையில்..
இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்..

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// .:: My Friend ::. said...
இது Warrior of Heaven & Earth-தானே? //

அதேதான் 'என் தோழி'!

//அருமையாய் இருக்கு வரிகள்..
அற்புதமாக புருந்துது இந்த இசையில்..
இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்.. //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! கண்டிப்பா இன்னும் தொடர முயற்சிப்பேன்.

Divya என்ன சொல்றாங்கன்னா...

\"
உங்க ரமேஷ்-ரம்யா காதலுக்கு பாட்டு வேணும்னா சொல்லுங்க. ஒருப் பாட்டுக்கு அம்பது டாலர்தான் :) \"

ரமேஷ் - ரம்யா மோதல் முடியுமான்னு பார்க்கலாம், அப்புறம் பாடல் தேவைபடுதா இல்லீயான்னு பார்க்கலாம்[ ஆனாலும் 50 $ டூ மச், கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க!]

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// Divya said...
ரமேஷ் - ரம்யா மோதல் முடியுமான்னு பார்க்கலாம், அப்புறம் பாடல் தேவைபடுதா இல்லீயான்னு பார்க்கலாம்//

சரி. பொறுத்திருந்துப் பார்ப்போம். எனக்கென்னமோ காதல்தான்னு தோனுது.

[ ஆனாலும் 50 $ டூ மச், கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க!]

உங்களுக்கு எப்போ பாட்டு வேணுமோ அப்ப, ஐ வில் ரி-கன்ஸிடர் திஸ் :)

அரை பிளேடு என்ன சொல்றாங்கன்னா...

கவிஜ.. கவிஜ... கலக்கலா கீது...

கல்லற, கானல் நீரு, பிம்பம், ஆக்சிஜன்... ஒரு தமிழு சினிமா பாட்டுக்கு இன்னான்னா வோணுமோ அவ்வளவும் இந்த கவிஜையில கீதே...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//அரை பிளேடு said...
கவிஜ.. கவிஜ... கலக்கலா கீது...//

மெய்யாலுமா நைனா?

//கல்லற, கானல் நீரு, பிம்பம், ஆக்சிஜன்... ஒரு தமிழு சினிமா பாட்டுக்கு இன்னான்னா வோணுமோ அவ்வளவும் இந்த கவிஜையில கீதே... //

சினிமாப் பாட்டு எஃபெக்ட்தான் ஹி..ஹி...

கானா பிரபா என்ன சொல்றாங்கன்னா...

ஜி

கவிதைல கலக்கிறீங்க வீடியோவும் சூப்பர்

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// கானா பிரபா said...
ஜி

கவிதைல கலக்கிறீங்க வீடியோவும் சூப்பர் //

நன்றி கானா. கவிதை என்னோடதுதான். ஆனா விடியோயெல்லாம் என்னோடது இல்லீங்க :)

one among u என்ன சொல்றாங்கன்னா...

"உனை நீங்கிய நொடிகள் யாவுமே, பல யுகங்களே!
உன் பெயர் இல்லாச் சொற்களோ, பழிச் சொற்களே!
என் காதலே!"

nijama romba nalla irukku ...i admire these lines..

neengale kavi ezhudhi pattum padi side business panna enna..

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//one among u said...
"உனை நீங்கிய நொடிகள் யாவுமே, பல யுகங்களே!
உன் பெயர் இல்லாச் சொற்களோ, பழிச் சொற்களே!
என் காதலே!"

nijama romba nalla irukku ...i admire these lines..

neengale kavi ezhudhi pattum padi side business panna enna.. //

வாங்க எங்களுள் ஒருவரே!

நல்லா சொன்னீங்க... பாட்டு எழுதலாம். ஆனா நானே பாடனும்னு சொன்னீங்க பாருங்க. அங்கன தான் இடிக்குது. பாத்ரூம்ல பாடினாலே, கதவ தட்டி, நிறுத்த சொல்றானுவ. இதுல ச்ஸைடு பிஸ்னஸா?

அடிக்கடி வந்துட்டு போங்க...

Arunkumar என்ன சொல்றாங்கன்னா...

எப்டிங்க... கவிஜ சூப்பர் :)

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Arunkumar said...
எப்டிங்க... கவிஜ சூப்பர் :) //

எல்லாம் சினிமா பாட்டுக் கேட்ட எஃபெக்ட்தான்... :)

சிநேகிதி என்ன சொல்றாங்கன்னா...

பாடல் வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு...நீங்க எPழுதினதா என்று கேக்கலாம் என்று நினச்சேன் ஆனால் பின்னோட்த்தில 3 மணித்தியாலம் செலவழிச்சு எழுதினது சொல்லீட்டிங்க.

இன்னும் யாரும் றீமிக்ஸ் செய்து தரலையா? ஒரு பாட்டுக்கு $50 தாறன் என்று சொல்லிப்பாருங்க ஒருவேளை யாரும் றீமிக்ஸ் செய்து தருவினம் :-)

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

//சிநேகிதி கல் என்னன்னா...
பாடல் வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு...நீங்க எPழுதினதா என்று கேக்கலாம் என்று நினச்சேன் ஆனால் பின்னோட்த்தில 3 மணித்தியாலம் செலவழிச்சு எழுதினது சொல்லீட்டிங்க.//

ஆமாங்க நாந்தான் எழுதினேன். நமக்கும் இந்தப் பாட்ட மனப்பாடம் பண்ணனும்னு நெனச்சேன்.. அதுக்கு இதுவே பெஸ்டுன்னு எழுதிட்டேன் :)))

//இன்னும் யாரும் றீமிக்ஸ் செய்து தரலையா? ஒரு பாட்டுக்கு $50 தாறன் என்று சொல்லிப்பாருங்க ஒருவேளை யாரும் றீமிக்ஸ் செய்து தருவினம் :-)//

இன்னும் யாரும் செய்யல :(( 50 டாலரா??? ஒரு பாட்டுப் பாடுற அம்மணி கரோக்கி கெடச்சுதுனா பாடித் தாறேன்னு சொல்லிருக்காங்க :))))

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

பேசாமே படத்துக்குப் பொருந்துறமாரியே ஒரிஜினல் தளபதி 'கண்மணி கண்ணால் ஒரு சேதி சொல்லடி' போட்டுடலாம்.

G.Ragavan என்ன சொல்றாங்கன்னா...

எப்படி ஜி? எப்படி இப்படி? நடத்து நடத்து....அடுத்து ஒரு படம் எடுத்துற வேண்டியதுதான?

தூயா என்ன சொல்றாங்கன்னா...

பாட்டு தெரியலை ஜி :(

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

//Anonymous said...
பேசாமே படத்துக்குப் பொருந்துறமாரியே ஒரிஜினல் தளபதி 'கண்மணி கண்ணால் ஒரு சேதி சொல்லடி' போட்டுடலாம். //

ஆமாம்.. தலைவர் பாட்டு கரெக்ட்டா பொருந்தும் அந்தப் படக் காட்சிக்கு...

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

// G.Ragavan said...
எப்படி ஜி? எப்படி இப்படி? நடத்து நடத்து....அடுத்து ஒரு படம் எடுத்துற வேண்டியதுதான? //

நீங்க புரொடியுசர் ஆக ரெடின்னா நான் படமெடுக்க ரெடி :)))

சரி... எந்தப் படத்தச் சொல்றீங்க ஜிரா??? ;))))

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

// தூயா said...
பாட்டு தெரியலை ஜி :( //

அய்யயோ.. பாட்டு தெரியலியா?? யாரோ சதி பண்ணிட்டாங்கன்னு நெனக்கிறேன். இந்த லிங்ல படம் பாருங்க :))))

http://www.youtube.com/watch?v=iK_Ab05sVgw

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

http://en.wikipedia.org/wiki/Warriors_of_Heaven_and_Earth

செந்தழல் ரவி என்ன சொல்றாங்கன்னா...

நம்ம ஷைலஜாவையும் சர்வேசனையும் புடிச்சீங்கன்னா, மெட்டோட பாட்டும் பாடித்தந்திருவாங்க...

சூப்பர் !!!!! அடுத்த சினிமா கவிஞர் தயார்.

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

//Anonymous said...
http://en.wikipedia.org/wiki/Warriors_of_Heaven_and_//

நன்றி அனானி....

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

//செந்தழல் ரவி said...
நம்ம ஷைலஜாவையும் சர்வேசனையும் புடிச்சீங்கன்னா, மெட்டோட பாட்டும் பாடித்தந்திருவாங்க...

சூப்பர் !!!!! அடுத்த சினிமா கவிஞர் தயார்.//

இது நல்ல ஐடியாவ இருக்குதே... ஒரு ரிக்குவஸ்டு போட்டிருக்கேன். பாப்போம்... :)))

SurveySan என்ன சொல்றாங்கன்னா...

நேயர் விருப்பம் நல்லாதான் இருக்கு. ஆனா, ம்யூஜிக் இல்லாம பாடினா நல்லா இருக்குமான்னு தெரியலியே.
யாரயாவது கேட்டு பாப்போம் :)

ஷைலஜா என்ன சொல்றாங்கன்னா...

தழல்கள்ரவி சீரியசா சொன்னாரோ விளையாட்டுக்கு சொன்னாரோ..இப்பதான் நேயர்விருப்பத்துல உங்க மடல்பாத்து இங்கவந்து பாடலையும் கேட்டேன். பாட்டுவரிகளையும் படித்தேன்...இரண்டுமே சிறப்பா இருக்கு..பாக்லாம் பாடமுடியுதான்னு.
ஷைலஜா

ஜி - Z என்ன சொல்றாங்கன்னா...

// SurveySan said...
நேயர் விருப்பம் நல்லாதான் இருக்கு. ஆனா, ம்யூஜிக் இல்லாம பாடினா நல்லா இருக்குமான்னு தெரியலியே.
யாரயாவது கேட்டு பாப்போம் :)//

அதத்தான் பாடித் தாரேனு சொன்ன அம்மணியும் சொன்னாங்க... பாக்கலாம் :)))

// ஷைலஜா said...
தழல்கள்ரவி சீரியசா சொன்னாரோ விளையாட்டுக்கு சொன்னாரோ..இப்பதான் நேயர்விருப்பத்துல உங்க மடல்பாத்து இங்கவந்து பாடலையும் கேட்டேன். பாட்டுவரிகளையும் படித்தேன்...இரண்டுமே சிறப்பா இருக்கு..பாக்லாம் பாடமுடியுதான்னு.
ஷைலஜா//

பாருங்க.. பாருங்க :))

ஷைலஜா என்ன சொல்றாங்கன்னா...

ம்யூசிக்கை மட்டும் தனியா பிரிக்க முடியுமா? பாட்டு ஈசியா இருக்கு பாடிட்லாம்போல..ஆனா இதுக்கு பலமே இசை..வாட் டு டூ?
(want to talk more abt this can i have yr mail id, plz?)
ஷைலஜா

நாமக்கல் சிபி என்ன சொல்றாங்கன்னா...

ஜி,
உமக்கே நியாயமா இருக்கா?

காமெடியன்ஸ் லிஸ்டுல போடாம நம்ம பேரை பெருந்தலைகள் லிஸ்ட்ல போட்டு வெச்சிருக்கீறே!

நாமக்கல் சிபி என்ன சொல்றாங்கன்னா...

ஜி,

பாட்டு அருமை!
சினிமாப் பாடலுக்கான இலக்கணம் நன்றாகப் பொருந்தி வருகிறது!

(அதை சொல்லுற ஆளைப் பாருங்கடா ன்னு நீங்க சொல்ல நினைக்குறது எனக்குத் தெரியுதே)

Senthil என்ன சொல்றாங்கன்னா...

மிகவும் அழகான கவிதை. மணம் நிறைந்த பாராட்டுக்கள். உங்களைப் போன்றவர்களுடைய அழகான வரிகளுக்கு இசை அமைக்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன்!

All the best for your future endeavor.