Tuesday, December 19, 2006

19. லொல்லு சபா 'பல்லவன்'

லொல்லு சபா ஸ்டைல்ல, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிச்ச வல்லவன் படத்த அப்டீக்கா ரீமேக் பண்ணா எப்டி இருக்கும்னு ஒரு கற்பனை....

"காலைல இருந்து இந்த பல்லவன தேடிட்டு இருக்கேன். எங்க போனான். சுஜி நீ அவனப் பாத்தியா?", சந்தானம் சுஜிக்கிட்ட கேட்டான்

"இன்னக்கி சில்டரன்ஸ் டேயில்ல. அதான் தலைவர் பட்டைய கெளப்பிட்டு இருப்பாரு"

"ஓ! சில்டரன்ஸ் டேல எல்லா குழந்தைங்க கூட விளையாடிட்டு இருப்பானா?"

"அந்த மொக்க நாய், இண்டிபெண்டென்ஸ் டேயிக்கும், சில்டரன்ஸ் டேயிக்கும் வித்தியாசம் தெரியாம அலயுது. இன்னக்கும் கொடியேத்தி சாக்லேட் குடுப்பாங்களான்னு காலைலயே குளிக்காம கெளம்பிடிச்சி"

அப்டீயே கேமராவ ஸ்கூலாண்ட சுத்துனா...

பசங்களுக்கு வச்சிருந்த சாக்லெட்ட சுட்டு, வசமா மாட்டிக்கிட்டு, 'போடு ஆட்டம் போடு' அப்டீன்னு பேக்ரவுண்ட்ல பாட்டப் போட்டு, ஸ்கூல் வாத்தியார்களும், வாட்ச்மேனும் பல்லவன மொத்திட்டு இருக்காங்க.

அடி வாங்கிட்டு, தன்னோட சகாக்களோடு வந்து சேர்ந்திருறாரு நம்ம ஹீரோ.

"வாடா பல்லா. யாருடா உனக்கு அந்த பேரு வச்சாங்க?"

"எங்க ஆத்தாதான். எங்க ஆத்தா பல்லவன் பஸ்ல போய்கிட்டு இருக்கும்போதே நான் பொறந்ததனால எனக்கு அந்த பேரு வச்சிட்டாங்க"

"இப்டி சொல்லிதான்டா ஒருத்தன் உள்ள வந்தான். இப்ப அவங்கப்பனுக்கே அஸிஸ்டெண்ட் ஆயிட்டான். சரி மச்சான், மந்திரா பேடில இருந்து ஸானியா மிர்ஸா வரைக்கும் ட்ரை பண்ணினியே, ஏன் டா ஒருத்திக் கூட உன்ன திரும்பிப் பாக்கல", சந்தானம் பல்லவன் வாய கிழறினான்.

"மச்சான். பாக்குறப் பொண்ணுங்கள எல்லாம் நம்ம லவ் பண்ண முடியாதுடா. ஊருல எத்தன் பொண்ணுங்க இருக்காங்க. ஒரு பொண்ணப் பாத்தா, செருப்பால அடிக்கிறவ மாதிரி இருக்கும். இன்னொரு பொண்ணப் பாத்தா, படுத்து கெடக்கும்போது அம்மி கல்ல எடுத்து நடுமண்டைல நச்சுனு போடுறவ மாதிரி இருக்கும். ஆனா ஏதோ ஒரு பொண்ணப் பாத்தவுடனே மட்டும், அவளோட அப்பன் ஞாபகம் வராம இருக்கும் பார். அப்டி ஒரு பொண்ணத்தான் லவ் பண்ணனும்."

"ஏற்கனவே பெண்கள் உரிமைன்னு பேசிட்டு இருக்காங்கடா. இதுல உன்னையும் ஒரு பொண்ணு காதலிச்சா, மனித உரிமை மீறல்னு உள்ளத் தூக்கிப் போட்டுறப் போறாங்கடா. ஆமா உனக்கு எப்டிடா இந்த சுஜி ஃப்ரெண்ட் ஆனா"

"எனக்கு யாருடா கேள் ஃப்ரேண்ட்லாம். ஒரு இமேஜுக்காக அவளுக்கு மாச சம்பளம் கொடுத்து கேள் ஃப்ரெண்ட் மாதிரி நடிக்க சொன்னேன்"

கோரஸாக சகாக்கள் எல்லாரும் அவனை துப்புகிறார்கள்.

அடுத்த நாள், பல்லவன் வேகமா அவன் நண்பர்கள்கிட்ட ஓடி வருகிறான்.

"பாத்துட்டேன். பாத்துட்டேன். நான் பாத்துட்டேன்"

"நீயும் பாத்துட்டியா. நான் கூட சரளா குளிக்கிறத ஒளிஞ்சி நின்னுப் பாத்தேன் டா. கடைசிலப் பாத்தா அது அவ புருசன்"

"அது இல்லடா"

"அவன் பிச்சக்காரன் தட்டுல திருடுனானே. அத சொல்றியா"

"அதுவும் இல்லடா. எனக்கு புடிச்சப் பொண்ண நான் பாத்துட்டேன்"

"எப்டிடா?"

"அவ கோயில்ல செருப்பு தொலஞ்சிட கூடாதுன்னு ஒரு கால் செருப்ப மட்டும் ஒரு பக்கத்துல கழட்டிப் போட்டுட்டு, இன்னொரு கால் செருப்ப அந்தப் பக்கமா போட போனாளா, உடனே அவளோட கழட்டிப் போட்ட செருப்ப சுடப் போனேன். அத அவ பாத்துட்டா. என் மேல அனுதாபப்பட்டு அவளோட இன்னொரு செருப்பையும் என் மூஞ்சில விட்டெறிஞ்சிட்டா"

"அப்புறம்"

"அப்புறம் என்ன, ரெண்டு செருப்பையும் பக்கத்து கடையில பாதி விலைக்கு வித்துட்டேன்"

"டேய். அவ விட்டெறிஞ்சது, அனுதாபத்துல இல்லடா மஞ்ச மாக்கான். நாய தொறத்துரதுக்கு கல்லவிட்டு எறியிர மாதிரி உன்ன தொறத்துறதுக்கு செருப்ப எறிஞ்சிருக்காடா என் டுபுக்கு..."

"சரி சரி. அவளுக்கு ஃபோனப் போடு", சுஜி பல்லவனை அவசரப் படுத்தினாள்.

"கீழப் போட்டா ஃபோனு உடஞ்சிறாது", வேற யாரு? மனோகர்தான்.

"டேய் டப்பாத் தலையா. ஏன் டா வலிப்பு வந்தவன் மாதிரி கைய கால ஆட்டுற. நீ ஃபோன் போடுடா பல்லா"

பல்லவனும் அவளுக்கு ஃபோனைப் போட்டான்.

"ஹலோ! ஆக்ட்யுலா நான் உங்கள லவ் பண்றேன். நான் ஸ்டைல்ல கீனு ரீவ்ஸ் மாதிரிங்க. பாக்குறதுக்கு டாம் க்ரூஸ் மாதிரி இருப்பேன்"

"எழுதி வச்சி படிக்குது பார். யாருடா இவனுக்கு இதெல்லாம் எழுதி கொடுத்தது. காசுல நூல் கட்டி ஏமாத்தி ஃபோன் பண்ணுது. இதுல இவனுக்கு இந்த ரவுசு வேறயாடா", கலாய்த்துக் கொண்டிருந்தான் சந்தானம்.

அடுத்த நாள் பல்லவன் அவனது நட்புக் கூட்டனிக்குள் ஒரு வித்தியாசமான் கெட்-அப்பில் வருகிறார்.

"டேய். நான் யாருன்னு தெரியுதா?"

"இவரு வாய்ஸ் பெரிய எஸ்.பி.பி வாய்ஸ். கழுதகூட இத விட அழகா கத்தும்டா கருவாட்டு வாயா. டாம் க்ரூஸ் மாஸ்க்க போட்டுகிட்டா அப்டியே இவரு டாம் க்ருஸ் ஆயிருவானாம். எங்க முழுசா ஏ, பீ, ஸீ, டீ சொல்லு பாப்போம்"

"இல்லடா அவள்ட டாம் க்ரூஸ், கீனு ரீவ்ஸ் அப்டி, இப்டின்னு கத விட்டுட்டேன் டா. இன்னக்கி காலைல கண்ணாடியப் பாக்கும்போது, எனக்கே சகிக்கல. அதான் இந்த மாஸ்க்"

"அப்டியே அத போட்டுட்டு அவக்கிட்ட ப்ரபோஸ் பண்ணு. தப்பி தவறி அத கழட்டிட்டேன்னு வச்சிக்கோ, ஜூல இருந்து தப்பிச்சு வந்த காண்டாமிருகம்னு பயந்து சிக்கன்குனியா வந்திரப் போகுது அந்த பொண்ணுக்கு"

"டேய்! நீ கோவில்பட்டி வீரலட்சுமிய கல்யாணம் பண்ணிக்கிட்டு சீவலப்பேரி பாண்டியாகனும்னு பாக்குற. நான் சீவலப்பேரி பாண்டியாகி, கோவில்பட்டி வீரலட்சுமிய கல்யாணம் பண்ணுவேன்"

"நீ சீவலப்பேரி பாண்டியாயிட்டீனா, அப்புறம் வீரலட்சுமி உன் பொண்ணாயிருவாளடா. அப்புறம் எப்படி நீ அவள கல்யாணம் பண்ணிப்ப", மறுபடியும் நம்ம மனோகர்.

"டேய். ஏன் டா பஞ்ச் டையலாக் விடனும்னு, மனுசன பஞ்சரா ஆக்குறீங்க. அப்புறம் நான் உன்ன பஞ்ச் பண்ணிறுவேன்", சந்தானம் பல்லவனை ரெண்டு மூனு குத்து குத்தினான்.

'காதல் வந்திருச்சி... ஆசையில் ஓடி வந்தேன்', பாட்டுல அப்படியே ஹீரோயினிய மயக்கிடுறார் நம்ம ஹீரோ. அப்புறம் ஒரு நாள் மாஸ்க் இல்லாம போய் நிக்கிறாரு நம்ம ஹீரோ.

"அடப் பாவி! டாம் க்ரூஸ் மாஸ்க போட்டுக்கிட்டு என்ன ஏமாத்திட்டியேடா?"

"ஆமா.. உன் மூஞ்சிக்கு நானே அதிகம்."

"சரி அத்த வுடு. நான் கூட ஆஞ்சலினா ஜூலி மாஸ்க்கத்தான் போட்டுக்கிட்டு இருந்தேன்"

"என்னது ஆஞ்சநேயர் பக்தையா?", பல்லவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் தனது மாஸ்க்கை கழட்டினாள்.

"அடிப்பாவி நீ ரோட்டோரத்துல மோர் விக்கிற கருப்பாயிதானே?"

"நீயும் ஏமாத்துன.. நானும் ஏமாத்தினேன். என்ன உட்டா உனக்கு பொண்ணே கெடக்காது. என்ன சொல்ற?"

அப்புறம் அப்டி இப்டி அவுங்களும் லவ் பண்ணி கொஞ்ச நாள் ஓடியது. அப்போது ஒரு நாள் மழையில ஹீரோவும் ஹீரோயினியும் மழையில 'லூசுப் பெண்ணே'னு டூயட் பாடும்போது, ஹீரோவோட தலையில இருந்த விக் காத்துல பறந்துபோக பதறிப்போனாள் நம்ம ஹீரோயினி.

"டேய்! ஏன் டா என்னோட பெரியவன்னு நீ சொல்லவே இல்ல"

"பெரியவன்னு சொல்லிட்டு ஏம்மா 'டேய்' போட்டு பேசுற", மனோகர்தான்.

"வாய மூடுடா பொறம்போக்கு"

"என்ன கருப்ஸ். எல்லாருமே வயசுல பெரிய ஆம்பளங்களத்தானே கல்யாணம் பண்ணிக்கிறாங்க"

"டேய்.. அது இருபத்தஞ்சி வயசுல. நீ ரிட்யர்ட் ஆகி ஆறு வருசம் மாதிரி இருக்குற. உனக்கு காதல் கேக்குதா. போடா கெழ போல்டு"

"அப்டி பாத்தா ஜெமினி கணேசன் கூடத்தான் எம்பது வயசுல கல்யாணம் பண்ணினாரு"

"டேய்.. அவர்ட்ட டப்பு இருந்திச்சு பண்ணினாரு. கல்யாண வீட்டுல நாதஸ்வரத்த வச்சி ஊதுனாலே ஒடஞ்சி போற நாயி நீ. உனக்கு கல்யாணம் கேக்குதாடா?"

நம்ம ஹிரோயினி எஸ்கேப். அப்டியே ஹீரோ அப்ஸட். கனவுல கருப்பாயிகூடவும், முப்பது வருசத்துக்கு முன்னாடி கடல உருண்ட வாங்கி கேட்டு பல்லவன கொடுமப் படுத்துன கொண்டமூக்கியோடவும் நம்ம ஹீரோ, 'ய்ம்மாடி.. ஆத்தாடி..' அப்டீனு ஒரு ஸாங்கு. அத்தோட முடியுது லொல்லு சபா.



50 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...

Jollu என்ன சொல்றாங்கன்னா...

என்னாப்பா ஜி வல்லவன் பார்த்து ரொம்ப நொந்து போய்ய்ட்டீயளோ ?? ;)))))) நல்லா ஓட்டி இருக்கீங்க ;))))

one among u என்ன சொல்றாங்கன்னா...

first commenta...gud .

lollu sabha nijamave lolloda pogudhu..vaazthukal pa.

கார்மேகராஜா என்ன சொல்றாங்கன்னா...

மாப்ள!
அப்படியே கோடம்பாக்கம் பக்கம்
போங்க!

உங்கள மாதிரி ஆளதான் தேடுறாங்க!

----

பி.கு : வல்லவன் கதையவிட இது நல்லா இருக்கு!

ஸயீத் என்ன சொல்றாங்கன்னா...

சூப்பர் கமெடி ஜி!

Jeevan என்ன சொல்றாங்கன்னா...

Thala(G) kalkkuringa pa!! very humorous post:) From "எழுதி வச்சி படிக்குது பார்"... to end its good:)

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Jollu said...
என்னாப்பா ஜி வல்லவன் பார்த்து ரொம்ப நொந்து போய்ய்ட்டீயளோ ?? ;)))))) //

மன்மதன நம்பி ஏமாந்துதான் போனேன். ஆனா, நல்லவேளை, நம்ம நயன்ஸ் இருந்ததால, எப்டியோ போயிடிச்சி.

//நல்லா ஓட்டி இருக்கீங்க ;))))//

ஹி..ஹி...ஹி..

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//one among u said...
first commenta...gud .//

சாரிப்பா... ஜொள்ளு முந்திகினாரு...

//lollu sabha nijamave lolloda pogudhu..vaazthukal pa. //

நன்றிங்கோ! அடுத்தடுத்து இத்த மாதிரி ஏதாவது பண்றதுக்கு ட்ரை பண்றேன். வந்து பாத்துட்டு........ போங்க...

Syam என்ன சொல்றாங்கன்னா...

வல்லவன் நல்ல எபக்ட் போல...

//அந்த மொக்க நாய், இண்டிபெண்டென்ஸ் டேயிக்கும், சில்டரன்ஸ் டேயிக்கும் வித்தியாசம் தெரியாம அலயுது//

செம காமுடி :-)

Syam என்ன சொல்றாங்கன்னா...

//நம்ம நயன்ஸ் இருந்ததால, எப்டியோ போயிடிச்சி//

அப்படி சொல்லுங்க...அதுனால தான் அந்த படம் ஏதோ கொஞ்சம் ஓடிருக்கு :-)

இன்னும் உங்க சிதறல் படிக்கல படிச்சிட்டு சொல்றேன் :-)

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//கார்மேகராஜா said...
மாப்ள!
அப்படியே கோடம்பாக்கம் பக்கம்
போங்க!

உங்கள மாதிரி ஆளதான் தேடுறாங்க!//

ஆஹா! மாப்பு! வக்கிறீயல ஆப்பு...

//பி.கு : வல்லவன் கதையவிட இது நல்லா இருக்கு! //

ஹி...ஹி... ஒருவேளை நான்கூட கோடம்பாக்கம் போயிருவேணோ!..

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//ஸயீத் said...
சூப்பர் கமெடி ஜி! //

வாங்க ஸயீத்... எப்டி இருக்குது துபை...

அப்பப்ப வாங்க...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// Jeevan said...
Thala(G) kalkkuringa pa!! very humorous post:) From "எழுதி வச்சி படிக்குது பார்"... to end its good:) //

வாங்க ஜீவன். ரொம்ப டாங்ஸ். படத்தப் பாத்த வெறில எழுதுனது...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Syam said...
வல்லவன் நல்ல எபக்ட் போல...

//அந்த மொக்க நாய், இண்டிபெண்டென்ஸ் டேயிக்கும், சில்டரன்ஸ் டேயிக்கும் வித்தியாசம் தெரியாம அலயுது//

செம காமுடி :-) //

லொல்லு சபால்ல சான்ஸ் ஏதாவ்து இருந்து வாங்கி கொடுங்க நாட்டாம..

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Syam said...
அப்படி சொல்லுங்க...அதுனால தான் அந்த படம் ஏதோ கொஞ்சம் ஓடிருக்கு :-)//

ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்னீங்க நாட்ஸ்...

//இன்னும் உங்க சிதறல் படிக்கல படிச்சிட்டு சொல்றேன் :-) //

டக்குனு படிச்சிட்டு பக்குனு ஒரு பின்னூட்டம் போடுங்க..

வெட்டிப்பயல் என்ன சொல்றாங்கன்னா...

சூப்படுங்க...

பட்டைய கிளப்பிட்டீங்க

//"அந்த மொக்க நாய், இண்டிபெண்டென்ஸ் டேயிக்கும், சில்டரன்ஸ் டேயிக்கும் வித்தியாசம் தெரியாம அலயுது. இன்னக்கும் கொடியேத்தி சாக்லேட் குடுப்பாங்களான்னு காலைலயே குளிக்காம கெளம்பிடிச்சி"
//

//"எங்க ஆத்தாதான். எங்க ஆத்தா பல்லவன் பஸ்ல போய்கிட்டு இருக்கும்போதே நான் பொறந்ததனால எனக்கு அந்த பேரு வச்சிட்டாங்க"//

இப்படி எடுத்து போட்டா பதிவு முழுசா வந்திடும் போல...

இன்னும் நிறைய எழுதுங்க ஜி!!!

Divya என்ன சொல்றாங்கன்னா...

செம காமடி ஜி!!

உங்களுக்கு நல்ல கற்பனை திரனும், நகைச்சுவை உணர்வும் இருக்கிறது,
தொடர்ந்து இது மாதிரி நிறைய எழுதுங்க ஜி!!

\இப்டி சொல்லிதான்டா ஒருத்தன் உள்ள வந்தான். இப்ப அவங்கப்பனுக்கே அஸிஸ்டெண்ட் ஆயிட்டான். "\"

பாரதிராஜாவின் மகன் மனோஜையும் வாரிவிட்டிருக்கிறீங்க........சூப்பர்!!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// வெட்டிப்பயல் said...
சூப்படுங்க...

பட்டைய கிளப்பிட்டீங்க//

ஹி..ஹி.. எல்லாம் படம்பாத்த கடுப்புத்தான்..

//இப்படி எடுத்து போட்டா பதிவு முழுசா வந்திடும் போல...//

இன்னும் ரீமா சென் கதாபாத்திரமெல்லாம் யோசிச்சேன். அப்புறம் ரொம்ப நீளமாயிடுமேனு கட் பண்ணிட்டேன்.

//இன்னும் நிறைய எழுதுங்க ஜி!!! //

அதுக்குத்தானே இந்த கொலவெறி...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// Divya said...
செம காமடி ஜி!!

உங்களுக்கு நல்ல கற்பனை திரனும், நகைச்சுவை உணர்வும் இருக்கிறது,
தொடர்ந்து இது மாதிரி நிறைய எழுதுங்க ஜி!!//

கண்டிப்பா திவ்யா... அதுக்குத்தானே அவதாரம் எடுத்திருக்கோம்...;-)

//பாரதிராஜாவின் மகன் மனோஜையும் வாரிவிட்டிருக்கிறீங்க........சூப்பர்!! //

பேர பல்லவன் வச்சிக்கிட்டு அவர பத்தி சொல்லலேன்னா பாவமாயிடும்ல.... அதான்

Vicky என்ன சொல்றாங்கன்னா...

// நீ சீவலப்பேரி பாண்டியாயிட்டீனா, அப்புறம் வீரலட்சுமி உன் பொண்ணாயிருவாளடா. அப்புறம் எப்படி நீ அவள கல்யாணம் பண்ணிப்ப

செம கலக்கல் மச்சி :)

சிரிச்சு சிரிச்சு ...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Vicky said...
செம கலக்கல் மச்சி :)

சிரிச்சு சிரிச்சு ... //

வா விக்கி... ஒரு கொலவெறிதான்... இப்படி எழுத வச்சது...

Boston Bala என்ன சொல்றாங்கன்னா...

---ஏதோ ஒரு பொண்ணப் பாத்தவுடனே மட்டும், அவளோட அப்பன் ஞாபகம் வராம இருக்கும் பார்.---

---உடனே அவளோட கழட்டிப் போட்ட செருப்ப சுடப் போனேன். ---

:-))))

Sooper!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// Boston Bala said...
:-))))

Sooper! //

வாங்க பாபா!... அடுத்தது இத மாதிரி என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். நம்ம ப்ளாக்கர்ஸ் மீட்ட போட்டுடலாமா?

மு.கார்த்திகேயன் என்ன சொல்றாங்கன்னா...

ஜி.. சூப்பரா இருந்தது.. பேசாம லொள்ளு சபாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதப்போலாமே

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// மு.கார்த்திகேயன் said...
ஜி.. சூப்பரா இருந்தது.. பேசாம லொள்ளு சபாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதப்போலாமே //

வாங்க கார்த்தி... நம்ம சான்ஸ் கேட்டு போனா, அதையே சபாவுல போட்டு அசிங்கப் படுத்திருவானுங்க அந்த பயபுள்ளேள்வோ...

Boston Bala என்ன சொல்றாங்கன்னா...

---நம்ம ப்ளாக்கர்ஸ் மீட்ட போட்டுடலாமா---

போட்டுத் தாக்குங்க... உங்க நையாண்டியும் நம்மப் பேச்சும் நல்ல காம்பினேசன்.

ஆர்வத்துடன் வெயிட்டிங்

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//போட்டுத் தாக்குங்க... உங்க நையாண்டியும் நம்மப் பேச்சும் நல்ல காம்பினேசன்.

ஆர்வத்துடன் வெயிட்டிங் //

அய்யய்யோ! நம்ம அந்த அளவுக்கெல்லாம் மரியாதையா நக்கல் பண்ண தெரியாதுங்க..

வம்புல மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே... அப்புறம், ஸ்பெசல் ஆப்புல பேரு வந்திட போகுது...

தேவ் | Dev என்ன சொல்றாங்கன்னா...

ஜி.. உனக்குள்ளே ஒரு லொள்ளு ராஜ்ஜியமே இருக்கும் போல இருக்கே கலக்கல்ஸ்

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// தேவ் | Dev said...
ஜி.. உனக்குள்ளே ஒரு லொள்ளு ராஜ்ஜியமே இருக்கும் போல இருக்கே கலக்கல்ஸ் //

எல்லாம் படத்தப் பாத்த எஃபெக்டு...

வாங்க தேவ். இதுதான் உங்களோட முதல் வருகைன்னு நெனக்கிறேன். அப்பப்ப இப்டி வந்து எட்டி பாத்துட்டுப் போங்க...

one among u என்ன சொல்றாங்கன்னா...

enga g/ji adutha lollu sabha eppo start agum...

Arunkumar என்ன சொல்றாங்கன்னா...

ஜி
லேட்டா வந்துட்டேன். :(
செம காமுடி போங்க..
நல்ல கலாய்க்கிறீங்க...

ஓட்டி ஒழிச்சிட்டீங்க ஜி... கலக்கல்.
இந்த மாதிரி நிறைய எதிர்பாக்குறோம் !!!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//one among u said...
enga g/ji adutha lollu sabha eppo start agum... //

இந்த வாரம் நியூ யார்க் போறேன். அடுத்த வாரம் போடுறதுக்கு முயற்சி பண்றேன். [ஆனாலும் இது ஓவர். லொல்லு சபா போடுறவங்களே ஒரு வாரத்துக்கு ஒரு தடவதான் போடுறாங்க...]

[நான் நோ G/Ji. மீ Z... ]

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Arunkumar said...
ஜி
லேட்டா வந்துட்டேன். :(
செம காமுடி போங்க..
நல்ல கலாய்க்கிறீங்க... //

ஹி...ஹி...எல்லாம் உங்கள மாதிரி மக்கள பாத்து கத்துக்கிட்டதுதான்..

//ஓட்டி ஒழிச்சிட்டீங்க ஜி... கலக்கல்.
இந்த மாதிரி நிறைய எதிர்பாக்குறோம் !!! //

பின்ன சும்ம விட்டுறுவோமா... அடுத்த பழிய பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்..

one among u என்ன சொல்றாங்கன்னா...

have a fabulous new york trip...neenga than romba xmas holidays njy pannaporeenganu ninaikaren...

njy the trip, n poitu vandhona engalukku sollunga unga trip pathi..

Udhayakumar Durai என்ன சொல்றாங்கன்னா...

அற்புதம் ஜி. வாய் விட்டு சிரிக்க வைச்சீங்க. எப்படி லொள்ளுசபா டீமை ரீச் பண்ணறதுன்னு தெரிஞ்சுதுன்னா இதை அனுப்புங்க. ஒரு வெட்டு கூட இல்லாம அப்படியே வரும்.

Santhosh Kumar என்ன சொல்றாங்கன்னா...

ஜி,
கலக்கிட்டிங்க ஜி. சிரிச்சி சிரிச்சி தாங்கலை.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//one among u said...
have a fabulous new york trip...neenga than romba xmas holidays njy pannaporeenganu ninaikaren...

njy the trip, n poitu vandhona engalukku sollunga unga trip pathi.. //

kandippa.. athukunnu oru postu pottura maatoam :-)

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Udhayakumar Durai said...
அற்புதம் ஜி. வாய் விட்டு சிரிக்க வைச்சீங்க.//

romba nanri sound party... ippathaan vanthirukeengannu nenakiren.. appappa apdiye vanthuttu ponga...

//எப்படி லொள்ளுசபா டீமை ரீச் பண்ணறதுன்னு தெரிஞ்சுதுன்னா இதை அனுப்புங்க. ஒரு வெட்டு கூட இல்லாம அப்படியே வரும். //

ithellaam avunga poduvaangannu enakku nambikkaiye illa ;-)

irunthaalum try panni paakalaam.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Santhosh Kumar said...
ஜி,
கலக்கிட்டிங்க ஜி. சிரிச்சி சிரிச்சி தாங்கலை.//

romba nanRi santhosh. ezhuthumbothe naan siritchi siritchi thaan ezhuthunen...

.:: My Friend ::. என்ன சொல்றாங்கன்னா...

சூப்பரா எழுதுறீங்க.. சீக்கிரமே லொல்லு சபாவுல ஸ்க்ரிப்ட் ரைக்க்டரா உங்கள பார்க்கலாமா?

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//.:: My Friend ::. said...
சூப்பரா எழுதுறீங்க.. சீக்கிரமே லொல்லு சபாவுல ஸ்க்ரிப்ட் ரைக்க்டரா உங்கள பார்க்கலாமா? //

வாங்க My Friend... லொல்லு சபாலையா? நான்பாட்டுக்கு சாஃப்ட்வேர் இஞ்சினியர்ல நல்லாவே குப்ப கொட்டிட்டு இருக்கேன். இந்த வேலைக்கும் வினை வெக்க சொல்றீங்களா? :)

சந்தனமுல்லை என்ன சொல்றாங்கன்னா...

செம காமெடியா இருக்கே!
இத படிச்சிட்டு, இப்போ எனக்கு ஒரிஜினல் பல்லவன் சாரி..வல்லவன் எப்படி இருப்பான்னு பார்க்கனும் போல இருக்கு..:-)!!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//சந்தனமுல்லை said...
செம காமெடியா இருக்கே!
இத படிச்சிட்டு, இப்போ எனக்கு ஒரிஜினல் பல்லவன் சாரி..வல்லவன் எப்படி இருப்பான்னு பார்க்கனும் போல இருக்கு..:-)!! //

இன்னும் அந்த படத்துல பாக்கலியா? லைஃப்ல எது வேணும்னாலும் மிஸ் பண்ணலாம். ஆனா இந்த மாதிரி படத்த மட்டும் மிஸ் பண்ணவே கூடாதுங்க.. சீக்கிரம் போய் அந்தப் படத்தப் பாருங்க...

கானா பிரபா என்ன சொல்றாங்கன்னா...

ஜி

கடிச்சுக் கொதறீட்டீங்க போங்க, சிரிச்சு சிரிச்சு என் வயிறெல்லாம் பஞ்சராச்சிடிச்சுப்பா

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// கானா பிரபா said...
ஜி

கடிச்சுக் கொதறீட்டீங்க போங்க, சிரிச்சு சிரிச்சு என் வயிறெல்லாம் பஞ்சராச்சிடிச்சுப்பா//

வாங்க கானா (தேவா உங்க சொந்தக்காரரோ?)

உங்களோட பஞ்சர ஒட்டுறதுக்காக அழுகாச்சியா ஒரு பதிவு போட்டுட்டா போச்சு...

மிதக்கும் வெளி என்ன சொல்றாங்கன்னா...

தல இன்னிக்குத்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். நல்லா வாய்விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//மிதக்கும் வெளி said...
தல இன்னிக்குத்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். நல்லா வாய்விட்டுச் சிரிக்க வச்சுட்டீங்க. //

வாங்க மிதக்கும் வெளி. இப்பவாவது பாத்தீங்களே :)...

சிரிப்பதற்க்காகத்தானே போட்டது...

lollu-sabha என்ன சொல்றாங்கன்னா...

அனைத்து லொல்லு சபா விடியோக்களையும் பார்த்து சிரித்து மகிழ இங்கே வருகை தாருங்கள்
http://lollu-sabha.blogspot.com

செந்தில் என்ன சொல்றாங்கன்னா...

இந்த பதிவ அப்படியே ஸ்கிரிப்டா விஜய் டி.வி. லொள்ளு சபா டீமுக்கு அனுப்புங்க "ஜி".
அருமையா கலாய்ச்சிருக்கீங்க. படம் பார்த்து ஏமாந்தது புரியுது...

Jebastin என்ன சொல்றாங்கன்னா...
This post has been removed by the author.
Jebastin என்ன சொல்றாங்கன்னா...

"எழுதி வச்சி படிக்குது பார். யாருடா இவனுக்கு இதெல்லாம் எழுதி கொடுத்தது. ***காசுல நூல் கட்டி ஏமாத்தி ஃபோன் பண்ணுது***. இதுல இவனுக்கு இந்த ரவுசு வேறயாடா


very nice creative idea. CEG 4th block has 2 one rupee coin. i am gonna rock. ha aha ha ha....

Naan veyililmazai.blogspot.com fulla mudichitaen. Nallaikku assessment. mutta marku vanthuchi, appuram naan, classkea pomataen(Place ayachilla)