Saturday, December 9, 2006

10. குறும்பன்!!! (தேன்கூடுப் போட்டி)

அன்றும், என்றும் போல் இனிமையாகத்தான் பிறந்தது. நாட்காட்டியின் தேதியைத் தவிர அனைத்தும் நேற்றுப் போலத்தான் இருந்தது. 'தடாவிற்கு தடைப்போட அரசாங்க ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்'. நாளிதழின் தலைப்புச் செய்தியும், மேலாளர் அனுப்பிய கடிதத்தின் சிந்தனையும் நினைவூட்டியது அன்றைய விடுமுறையை. மனைவி இல்லாமல் வாழ்க்கை மங்கலாகத்தான் இருக்கின்றது. அவள் இல்லாமல், விடியற்காலையை எதிர்ப்பார்க்கும் விடச்சேவலைப் போல், விடுமுறை வேகமாய் மறைய விஞ்ஞானத்தின் விஷ்வரூபம் தொலைக்காட்சியின் உதவியை நாடினேன். தொலைக்காட்சியில் வந்ததென்னவோ தொலைதூரக் காட்சிகள்தான். ஆனால் என் மனமோ, தொலைந்துபோன காலத்தை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஆறு வயதில் தந்தையை இழந்தேன். நாற்பத்தெட்டு வயதிலேயே இவ்வுலகைவிட்டு 'விருப்ப ஓய்வு' பெற்றாள் தாயும். நல்லவேளை! பதினெட்டு வயதைத் தாண்டியதால், 'அநாதை' என்னும் அடையாள அட்டை என் பெயரோடு இணைய மறுத்தது. எல்லோரையும் போலவே கல்லூரி களத்தில் காதல் வயப்பட்டேன். சிலக் கோடுகளை கோணலாகப் போட்ட அதே இறைவந்தான் சிலக் கோடுகளை நேராகவும் போட்டான். எனக்கும் கிடைத்தது, காதலித்தவளோடேக் கல்யாண வாழ்வும், இலவச இணைப்பாய் அரசாங்க வேலையும். இல்லற இலக்கணமாய் காதலும், மோதலும், கூடலும் இனிதே அறங்கேறியது எங்கள் திருமண அரங்கில். கருவுற்று, அவள் கருவானத் தாயில்லம் தேடிச் சென்று விட்டாள்.

தற்காலிகமாய் ஓர் பிரிவு. காலம் துன்பத்திற்க்கு மருந்தென்பார்கள். எனக்கு மட்டும் அது ஏனோ காயமாகிப் போனது. மூன்று மாதகாலப் பிரிவும், அன்றைய விடுமுறையால் ஏற்பட்டத் தனிமையும், எனது ஹார்மோன்களையும், அணுக்களையும் ஒன்றுதிரட்டி உண்ணாவிரதமிருந்து புதுவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தனிமைத் துரத்த, பிரிவை மறைக்க, வெளிக்காற்றை சுவாசிக்கக் கடைத்தெருவுக்கு ஓடினேன்.

பிச்சைக்காரிக் கிழிஞ்சல்களில்கூடக் கவர்ச்சியைத் தேடும் எச்சில் மனிதர்களின் அணிவகுப்பில் அன்று ஏனோ நான் முதன்மையாய் நின்றேன். ஆபாசத்திற்க்கு எதிராக போர்க்கொடித் தூக்கும் மாதர் சங்கத்தின் மேல் அன்று என்னவோ அளவற்றக் கோபமெனக்கு. இயற்கையின் சதியோ? இல்லை, எனது விதியோ? அறிமுகம் ஆனாள் ஓர் உடல் விற்கும் வியாபாரி. சபலத்தின் உச்சத்தில், அரசின் விளம்பரமெல்லாம் மறந்து போனது எனக்கு. எனது இச்சைகள் யாவும் விடுதலைப் பெற்று வெற்றிக் கோஷமிட்டது. காயை சரியாக நகர்த்திய வெற்றிக் களிப்பில் சிரித்துக் கொண்டிருந்தான் அவன். பகடைக்காய் நானென்பதை அறியாமல், ஏதோ கின்னஸ் சாதனை புரிந்ததுபோல் பெருமைப்பட்டன எனது புருவங்கள், அவள் கூறிய அந்த வார்த்தையால்.

'குறும்பன்'.

'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!', வைரமுத்துவின் வைர வரிகள் எனது வாழ்வில் உண்மையானது. மரணப்படுக்கையில் அவள் கூறிய அந்த வார்த்தை மட்டும் மறக்காமல் ஒலித்தது. சில நொடிகளைக் கட்டுப்படுத்த முடியாத நான் இப்போது எய்ட்ஸின் கட்டுப்பாட்டில். என்னைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டப் பாவத்தால், என் மனைவி மட்டும் வேகமாய் மேலோகம் சென்றுவிட்டாள். மறையப் போகும் எனக்கு, 'என்னைத் துரத்திய அதே 'அநாதை' என் மகனையும் துரத்துமே' என்ற எண்ணம் மட்டும் மறையாமல் எய்ட்ஸையும் மீறி என்னைக் கொன்றுகொண்டிருந்தது.



21 பேரு போட்டுத் தாக்கிருக்காங்க...

அரை பிளேடு என்ன சொல்றாங்கன்னா...

குறும்பன் னு டைட்டில் போட்டுட்டு ஸ்டிராங்கா ஒரு மெஸேஜி...
ஸோ நைஸ் ஸ்டோரி..
லிட்டில் ஆர்ட்டிபிஷியல்... பட் ஃபுல் ஆப் சேம் குட் ஓல்டு, பட் மஸ்ட் மெஸேஜி..

:)))

Nambikai Pandian என்ன சொல்றாங்கன்னா...

கதை,நல்ல கருத்துடன் அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள்‌

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//அரை பிளேடு said...
குறும்பன் னு டைட்டில் போட்டுட்டு ஸ்டிராங்கா ஒரு மெஸேஜி...//

எல்லாருமே ஹி!..ஹி!.. கதப் போடுறாங்களே! நம்ம கொஞ்சம் சீரியஸா இருக்கனும்னு... அப்புறம் எல்லாருமே அரைபிளேடு இல்லையே!

//ஸோ நைஸ் ஸ்டோரி..//

ரொம்ப நன்றிபா...

//லிட்டில் ஆர்ட்டிபிஷியல்...//

வார்த்தைகள் ஆர்ட்டிமிஷியலா இருந்தாலும், இன்னும்கூட இந்த கதைல வர்ற கதாபாத்திரம் மாதிரி படிச்ச முட்டாள்கள் இருக்கத்தான் செய்றாங்க.

//பட் ஃபுல் ஆப் சேம் குட் ஓல்டு, பட் மஸ்ட் மெஸேஜி..//

கரிக்கட்டு.

நாமக்கல் சிபி என்ன சொல்றாங்கன்னா...

மெஸேஜோட ஒரு நல்ல கதை! வாழ்த்துக்கள்!

குறும்பன் என்ன சொல்றாங்கன்னா...

கதைக்கு என்பேர் வைத்த ஜிக்கு ஒரு ஜீ இல்ல ஜே.

கதையின் தலைப்புக்காகவே தேன்கூடு பரிசு கொடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்

எய்ட்ஸ்:- ஒரு நொடி சபலம் முடிவில் மரணம்.

எய்ட்ஸ்:- ஐந்து நிமிட இன்பம் ஆயுள் முழுக்க துன்பம்.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Nambikai Pandian said...
கதை,நல்ல கருத்துடன் அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள்‌//

நன்றிங்க நம்பிக்கை!. பழையக் கருத்துதான். இன்னொரு தடவ சொன்னேன். அவ்வளவுதான்.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// நாமக்கல் சிபி said...
மெஸேஜோட ஒரு நல்ல கதை! வாழ்த்துக்கள்! //

நன்றி சிபி. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

Divya என்ன சொல்றாங்கன்னா...

உரையாடல்களில்லாத ஒரு கதையை ஒவ்வொரு வரிகளும் அழகாக நகர்த்தி செல்கிறது....

சில நொடி இன்பத்திற்காக தடம்புரண்டவனின் பாதிப்பையும்,இழப்பையும்,வேதனையும் இன்னும் அழுத்தமாக கடைசி வரிகளில் கூறியிருக்கலாமோ என்பது என் கருத்து.

விழிபுணர்வு ஏற்படுத்தகூடிய ஒரு கருத்துடன் அருமையாக சொல்லியிருகிறீர்கள்,
போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// குறும்பன் said...
கதைக்கு என்பேர் வைத்த ஜிக்கு ஒரு ஜீ இல்ல ஜே. //

டைட்டில் மட்டும்தாங்க உங்களோடது. கதை உங்களப் பத்தி இல்லீங்க :)

//கதையின் தலைப்புக்காகவே தேன்கூடு பரிசு கொடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்//

என்னங்க குச்சி மிட்டாய் வாங்கி திங்குற மாதிரி பேசுறீங்க. வன்முறையைத் தூண்டினேன்னு தமிழ்மணம்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிறப் போறாங்க.

//எய்ட்ஸ்:- ஒரு நொடி சபலம் முடிவில் மரணம்.

எய்ட்ஸ்:- ஐந்து நிமிட இன்பம் ஆயுள் முழுக்க துன்பம். //

சூப்பர் பஞ்ச் டையலாக்ஸ்.

வெட்டிப்பயல் என்ன சொல்றாங்கன்னா...

அருமையா கொண்டு போயிரூக்கீங்க ஜி.
நல்ல கருத்த அட்டகாசமான கதை களத்துடன் எடுத்து சென்றதற்கு பாராட்டுக்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// Divya said...
உரையாடல்களில்லாத ஒரு கதையை ஒவ்வொரு வரிகளும் அழகாக நகர்த்தி செல்கிறது....//

நன்றி திவ்யா....

//சில நொடி இன்பத்திற்காக தடம்புரண்டவனின் பாதிப்பையும்,இழப்பையும்,வேதனையும் இன்னும் அழுத்தமாக கடைசி வரிகளில் கூறியிருக்கலாமோ என்பது என் கருத்து.//

முதலில், உங்களுடைய இந்தக் கருத்துக்கு மிக்க நன்றி.

எய்ட்ஸின் பாதிப்பும், இழப்பும் எல்லோருக்கும் தெரிந்ததே!. நான் கட்டுப்பாடுடைய மனிதனையும் சபலம் தடம்புரளச் செய்யும்ங்குற கருத்தை மட்டுமே வலியுருத்தனும்னு நெனச்சேன்.

//விழிபுணர்வு ஏற்படுத்தகூடிய ஒரு கருத்துடன் அருமையாக சொல்லியிருகிறீர்கள்,
போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! //

இன்னொரு தபா டாங்ஸு...

ஜி என்ன சொல்றாங்கன்னா...

// வெட்டிப்பயல் said...
அருமையா கொண்டு போயிரூக்கீங்க ஜி.
நல்ல கருத்த அட்டகாசமான கதை களத்துடன் எடுத்து சென்றதற்கு பாராட்டுக்கள்.//

நன்றி வெட்டி... எல்லாம் உங்கள மாதிரி ஆட்களோட உற்சாகம்தான்.

Pradeep என்ன சொல்றாங்கன்னா...

beautifully narrated :)

ungalukku thaanga prize!

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Pradeep said...
beautifully narrated :)//

Thanks Pradeep.

//ungalukku thaanga prize! //
நீங்க சொன்னதே பரிசு கொடுத்த மாதிரிதான் இருக்குது ;-) ஆனா, எக்கசக்க பெருந்தலைகள் இங்க இருக்காங்க. அதனால top-10 ல வந்தாளே பெரிய விசயம்தான்...

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..

வெண்டிய மெசேஜ்...

அப்படியே இத பத்தி நான் எழுதன கவிதய பாருங்க..(எல்லாம் ஒரு விளம்பரம் தான்ன்ன்)


http://mani-vilas.blogspot.com/2006/11/blog-post_16.html

மணி ப்ரகாஷ்

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//மணி ப்ரகாஷ் said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..

வெண்டிய மெசேஜ்...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மணி!

//அப்படியே இத பத்தி நான் எழுதன கவிதய பாருங்க..(எல்லாம் ஒரு விளம்பரம் தான்ன்ன்)

http://mani-vilas.blogspot.com/2006/11/blog-post_16.html//

பின்னூட்டம் போட்டாச்சு. உங்க கவிதைக்கு இந்த கதை ஜுஜூபி :).

Anonymous என்ன சொல்றாங்கன்னா...

fantastic story.idhellam padichakooda sabalaputhikaranga thirunthave mattanunga.

ஜி என்ன சொல்றாங்கன்னா...

//Anonymous said...
fantastic story.idhellam padichakooda sabalaputhikaranga thirunthave mattanunga. //

இந்த கதைல சொன்னதுமாதிரி, நிறைய பேர் (நல்லவங்கத்தான்), சில நேரத்துல தடுமாறிடுறாங்க.. அதான் பிரச்சனையே...

Raji.R என்ன சொல்றாங்கன்னா...

Really a nice story with nice message...

CVR என்ன சொல்றாங்கன்னா...

WOW!!
ரொம்ப நல்ல கதை தலைவரே!!

நேரம் கிடைக்கும்போது இதை படிங்க!! :-)

http://simplycvr.blogspot.com/2005/11/life-to-live.html

மனதின் ஓசை என்ன சொல்றாங்கன்னா...

அருமை ஜி.. ஒரு பக்க கதைகளில் திருப்பம் மட்டுமே இருக்கும்.. இவ்வளவு உணர்ச்சிகளையும் கருத்தையும் சுமந்து வந்தவை மிக அரிது..

கிட்டத்தட்ட ஒவ்வொரு வரியும் அருமை..எனக்கு பிடித்தவை.

/சிலக் கோடுகளை கோணலாகப் போட்ட அதே இறைவந்தான் சிலக் கோடுகளை நேராகவும் போட்டான்//

//. கருவுற்று, அவள் கருவானத் தாயில்லம் தேடிச் சென்று விட்டாள்.//

//காலம் துன்பத்திற்க்கு மருந்தென்பார்கள். எனக்கு மட்டும் அது ஏனோ காயமாகிப் போனது.//

//பிச்சைக்காரிக் கிழிஞ்சல்களில்கூடக் கவர்ச்சியைத் தேடும் எச்சில் மனிதர்களின் //


//சில நொடிகளைக் கட்டுப்படுத்த முடியாத நான் இப்போது எய்ட்ஸின் கட்டுப்பாட்டில்//